வேலைவாய்ப்பு

கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வட்டாட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.

கோவை : கோவை மாவட்டத்தில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக வட்டாட்சியர் அலுவலகம் அறிவித்துள்ளது.

இது குறித்து சூலூர் வட்டாட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டதாவது:- 

கோவை மாவட்டம் சூலூர் வட்டத்திற்குட்பட்ட அரசூர், கம்மாளப்பட்டி, பாப்பம்பட்டி, ராசிபாளையம், எஸ்.அய்யம்பாளையம், செஞ்சேரிபுதூர் மற்றும் வடவள்ளி ஆகிய 7 கிராமங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடத்தை நிரப்புவதற்காக சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

இப்பணிக்கு குறைந்தபட்ச கல்வித் தகுதியாக 5-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 21 முதல் 35 வயதுக்குள் இருக்க வேண்டும். விண்ணப்பத்துடன் கல்வி, சாதி, இருப்பிட மற்றும் முன் அனுபவச் சான்றிதழ்களோடு ரேசன் கார்டு நகல்களும் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். 

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் மார்ச் 9-ம் தேதிக்குள் வந்து சேர  வேண்டும்.   

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...