ஆட்சியர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்றவரால் பரபரப்பு

சொத்து தகராறு காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை: சொத்து தகராறு காரணமாக கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஒருவர் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியை அடுத்த காளியாபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஜீவன் மைக்கேல் ஜோசப். இவரது மனைவி சித்ரா. இந்த தம்பதியினருக்கு அயோனா(11), ஸ்டெபினி(10) என்ற இரு மகள்கள் உள்ளனர். ஜோசப்-ன் மனைவி அவரைப் பிரிந்து திருப்பூரில் பணி புரிந்து வருவதாகக் கூறப்படுகிறது. 

இந்நிலையில், இன்று காலை கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்த ஜோசப் தான் வைத்திருந்த பேனா கத்தியைக் கழுத்தில் வைத்து தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதனைக் கண்ட அங்கிருந்தவர்கள் அவரிடம் இருந்து பேனா கத்தியை பிடுங்கி போலீசாருக்கு தகவல் அளித்தனர். 

தகவலின் பேரில் அங்கு வந்த போலீசார் ஜோசப்-ஐ மீட்டு காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரித்தனர். அப்போது, ஜோசப்-ன் சகோதரி அவருக்கு சேர வேண்டிய சொத்தை தராமல் ஏமாற்றுவதாகவும், இது தொடர்பாக கேட்டால் ஆட்கள் வைத்து மிரட்டுவதாகவும், அதனாலேயே தற்கொலைக்கு முயன்றதாகவும் தெரியவந்தது. 

கடந்த சில மாதங்களாக மனு அளிக்க வருபவர்கள் தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வருவதைத் தொடர்ந்து ஆட்சியர் அலுவலகத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மனு அளிக்க வரும் அனைவரும் தீவிர சோதனைக்குப் பின்னரே உள்ளே அனுமதிக்கப்பட்டு வரும் நிலையில் இன்று நடைபெற்ற தற்கொலை முயற்சி சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...