காரமடை அரங்கநாதர் கோவிலில் கொடியேற்று விழா : பக்தர்கள் கோவிந்தா, கோவிந்தா முழக்கம்

கோவை காரமடை அரங்கநாதர் கோவில் மாசி மகாத்திருத்தேரோட்டத்தை முன்னிட்டு கொடியேற்று விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது.

கோவை: கோவை காரமடை அரங்கநாதர் கோவில் மாசி மகாத்திருத்தேரோட்டத்தை முன்னிட்டு கொடியேற்று விழா வெகுவிமர்சையாக நடைபெற்றது. 



கொங்கு மண்டலத்தின் பிரசித்தி பெற்ற வைனவத்திருத்தளமான ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த காரமடை அரங்கநாதர் கோவிலில் மாசி மகா திருத்தேரோட்டம் நிகழ்ச்சியினை முன்னிட்டு இன்று கொடியேற்றும் நிகழ்ச்சி வெகுவிமர்சையாக நடைபெற்றது. அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு அரங்கநாதருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர், அரங்கநாதர் ஸ்ரீதேவி, பூதேவி சமேதரராய் உற்சவ மூர்த்தியாக கோவில் முன் மண்டபத்தில் எழுந்தருளி கருடாழ்வாருக்கும் பக்தர்களுக்கும் காட்சி அளித்தார். அதன்பின்னர், கோவில் கொடிமரத்தின் அடியில் உள்ள கருடாழ்வருக்கு பால், திருமஞ்சனம் கொண்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. 



இதனைத் தொடர்ந்து, கருடாழ்வார் உருவம் பொறித்த கொடியை கோவில் பட்டர் மற்றும் பொதுமக்கள் கோவிலை சுற்றி எடுத்து வலம் வந்தனர். பின்னர், மதியம் பன்னிரெண்டு நாற்பது மணிக்கு அர்ச்சகர்கள் வேதமந்திரங்கள் மற்றும் தாசர்களின் சங்கொலி முழங்க கருடாழ்வார் கொடி அரங்கநாதர் கோவில் கொடிமரத்தில் ஏற்றப்பட்டது. இந்த நிகழ்வின் போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என கோசங்களை எழுப்பி அரங்கநாதரை வழிபட்டனர். விழாவின் முக்கிய நிகழ்வான திருத்தேரோட்டம் நிகழ்ச்சி வரும் 1-ம் தேதி நடைபெற உள்ளது. 

Newsletter

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...