புதியதாக அரசியல் கட்சியை துவங்கி உள்ள கமலஹாசன் தனது கொள்கையை முறைப்படி தெரிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
கோவை: புதியதாக அரசியல் கட்சியை துவங்கி உள்ள கமலஹாசன் தனது கொள்கையை முறைப்படி தெரிவிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணை செயலாளர் வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
கோவையை அடுத்த நேருநகர் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், கிழக்கு மண்டல மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் கலந்து கொண்ட வீரபாண்டியன் செய்தியாளர்களிடம் பேசுகையில் இதனைத் தெரிவித்தார். மேலும், அவர் கூறியதாவது :- காவிரி நதிநீர் பிரச்சனையில் அனைத்து கட்சி கூட்டத்தைக் கூட்டி இருப்பது நல்ல விஷயமாக அமைந்து உள்ளது. விரைவில் பேசி இந்தப் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பேரணியில் தாக்குதல் நடத்திய சம்பவம் கண்டனத்திற்குரியது. இது குறித்து நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும்.
புதிய கட்சியை தொடங்கியுள்ள கமலஹாசன் இடதுசாரியும் அல்ல, வலது சாரியும் அல்ல என கூறி இருப்பது அரசியலே இல்லை. அவர் தன்னுடைய கொள்கை நிலைப்பாட்டை முறையாகக் கூற வேண்டும். என்றார்.
முன்னதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின், கிழக்கு மண்டல மாநாட்டில், கோவை மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய வேண்டும், பாதாள சாக்கடை பணிகளை துரிதமாக மேற்கொள்ள வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.