கோடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளை ஈக்களின் தாக்குதல் காரணமாக தென்னை மரங்கள் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
திருப்பூர்: கோடைக்காலம் ஆரம்பித்துள்ள நிலையில், திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளை ஈக்களின் தாக்குதல் காரணமாக தென்னை மரங்கள் பாதிக்கப்படுவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
தென்னை மரங்களில் தற்சமயம் பூச்சியின் தாக்குதல், வெயிலின் தாக்கம், தண்ணீர் தட்டுப்பாடு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் மரத்தில் நோய் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. அதிலும், முக்கியமாக ஆஸ்திரேலியன் பாராஸைட் என அழைக்கப்படும் வெள்ளை ஈக்களின் தாக்குதல்கள் மிக அதிகளவில் காணப்படுகின்றன.
பல்லடம் வட்டாரத்தில் வெள்ளை ஈக்களின் தாக்குதலால் அதிகளவில் தென்னை மரங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. தாவர இலைகளின் அடிபகுதியை உணவாக உட்கொள்ளும் சிறிய பூச்சி வகை இனங்களின் ஒன்று வெள்ளை ஈக்களாகும். மஞ்சள் சேமல் நோய் என்ற நச்சுயிரி நோயை ஒரு செடியில் இருந்து மற்றொரு செடிக்கு, வெள்ளை ஈக்கள் பரப்புகின்றன. இந்த ஈக்கள் தென்னையில் இருந்து சாற்றை உறிஞ்சுவதால், மரங்களுக்குத் தேவையான நீா்ச்சத்து கிடைப்பதில்லை. இதனால், மரங்கள் முற்றிலும் வாடி, வளா்ச்சிக்கு தடைப்படுகிறது. மேலும், காய்களும் பிடிப்பதில்லை.

இது குறித்து பல்லடத்தைச் சோ்ந்த விவசாயி கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், தன்னுடைய ஒன்பது ஏக்கா் நிலத்தில் இதுவரை 60-க்கும் மேற்பட்ட மரங்கள் வெள்ளை ஈக்களால் தாக்குதலால் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த ஈக்கள் தென்னை மரங்களில் அதிகம் காணப்படுகின்றன. இதைப் பற்றி பல விவசாயிகளுக்கு விழிப்புணர்வு இல்லை. மேலும், தென்னை மரங்களில் மட்டுமின்றி பருத்தி, மரவள்ளி கிழங்கு, முருங்கை போன்றவற்றில் தாக்கும்.
இது மட்டுமின்றி தென்னை மரங்களில் தஞ்சாவூா் வாடல் நோய், வண்டு தாக்குதல், சிகப்பு சார்வடிதல் நோய், குருதல்கள் நோய் போன்ற நோய்கள் தாக்குவதாலும் தென்னை விவசாயம் பெரும் பாதிப்பு அடைந்து வருகிறது.

வேளாண்துறையை அணுகி ஒட்டுனி எனப்படும் வெள்ளை ஈக்களை கொள்வதற்கான பாக்டீரியா வைத்துள்ளோம். இருப்பினும், வேளாண்துறை அதிகாரிகள் தென்னை விவசாயிகள் பிரச்சனை குறித்து நடவடிக்கை எடுப்பதில் ஆமை வேகம் கட்டுகின்றனர். இந்த நிலைமை நீடித்தால் வரும் காலங்களில் தென்னை விவசாயம் செய்ய ஆட்கள் இல்லாமல் அழிந்துவிடும். மரம் வளா்ப்பதற்கு உரத்தின் விலை அதிகமாக உள்ளது. மேலும், 5 வருடம் பராமரிப்பிற்கு பிறகு, இளநீா் காய்ப்பதற்காக காத்திருக்கும் விவசாயிகளுக்கு இதுபோன்ற நோய்களால் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது.

நல்ல காய்க்கும் மரம் என்றால் சுமார் 120 முதல் 160 காய்கள் காய்க்கும். மேலும், இந்த பருப்பு விற்பனை, எண்ணெய் போன்றவற்றில் சிறிது லாபமே பார்க்க முடியும். அரசாங்கம் நீராபானம் என்று சொல்லக்கூடிய பதநீருக்கு அனுமதி அளித்தால், ஓரளவு சமாளித்து விடலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும், அந்தப் பகுதி விவசாயிகளிடம் கேட்கும் போது, கோடைக் காலம் ஆரம்பமாவதால் பொதுமக்கள் அதிகம் விரும்பி வாங்கிப் பருகும் பானம் இளநீர். இந்நிலையில், நோய் காரணமாக தென்னை மரங்கள் அழிவதோடு எங்கள் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்படுகிறது, என்றனர்.

எனவே, தென்னை மரங்களைப் பாதுகாக்க அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அந்தப் பகுதி விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது.