இந்தியாவிலேயே முதன்முறையாக ஜெர்மன் தொழில்நுட்பத்தில் நவீன காசநோய் பரிசோதனை கருவி நீலகிரி மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
நீலகிரி: இந்தியாவிலேயே முதன்முறையாக ஜெர்மன் தொழில்நுட்பத்தில் நவீன காசநோய் பரிசோதனை கருவி நீலகிரி மாவட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.
காசநோய்க்கான விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. மேலும், அரசு மற்றும் தனியார் ஒத்துழைப்போடு காசநோயை கண்டறிந்து முற்றிலும் ஒழிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்தியாவில் முதன்முறையாக ஜீன் எக்ஸ்பர்ட் எனும் உலகதரம் வாய்ந்த ஜெர்மன் தொழில்நுட்பத்தால் ஆன நவீன காசநோய் பரிசோதனை கருவி இன்று உதகையில் அறிமுகப்படுத்தப்பட்டது.

உதகை தலைமை அரசு மருத்துவமனையில் உள்ள காநோய் பரிசோதனை மையத்தில் இக்கருவியை நீலகிரி மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக அறிமுகம் செய்து வைத்தார். காசநோய் முற்றிலும் ஒழிப்பதற்காக நீலகிரி மாவட்டத்திற்கு மட்டும் ரூ. 1 கோடியே 09 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.