கேரளாவில் தமிழக வாகனங்கள் மீது தாக்குதல்: எல்லையில் வாகனங்கள் நிறுத்தம்

கோவை மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்து நீர் திறந்து விடக் கோரி கேரளாவில் தமிழக வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், இருமாநில எல்லையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.


கோவை: கோவை மாவட்டம் ஆழியாறு அணையில் இருந்து நீர் திறந்து விடக் கோரி கேரளாவில் தமிழக வாகனங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதால், இருமாநில எல்லையில் வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன.



பிஏபி திட்டத்தின் கீழ் ஆழியாறு அணை மற்றும் சோலையாறு அணையில் உள்ள நீரை தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்கள் ஒப்பந்த அடிப்படையில் பங்கிட்டு வருகின்றன. தற்போது, அணைகளின் நீர்மட்டம் கடும் சரிவை சந்தித்திருப்பதால், கேரளாவிற்கான நீர் திறந்துவிடப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், கீழ் ஆழியாறு அணையில் இருந்து நீர் தரக்கோரி தமிழக வாகனங்கள் மீது கேரளாவில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்த தாக்குதலை சித்தூர் எம்எல்ஏ கிருஷ்ணன் குட்டி ஆதரவாளர்கள் நிகழ்த்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கோவை மீனாட்சிபுரம் சோதனைச்சாவடியில் தமிழக பதிவெண் கொண்ட வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதேபோல, தமிழக வரும் கேரளா பதிவெண் கொண்ட வாகனங்களை திராவிடர் கழகத்தினர் தடுத்து நிறுத்துவதால் கோவை வழியாக தமிழகம் வரும் கேரள பேருந்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன.



மேலும், அசம்பாவீதம் ஏதும் நிகழாமல் இருக்க இருமாநில எல்லைப் பகுதியான கோவை, மீனாட்சிபுரம் சோதனைச்சாவடி அருகே போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...