பயனற்ற இலவசங்களை வாங்கி, பயனுள்ள கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவத்தை இழந்த அவலம்

மக்களுக்கு இலவசமாக தரும் பொருட்கள் தரமாக இருக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் கமிஷன் அடிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இலவசங்களால் மக்களுக்கு கிடைத்த லாபத்தைவிட, அதிகாரத்தில் இருப்பவர்கள் அடித்த கொள்ளை பல மடங்கு அதிகமாகும்.

கோவை : மக்களுக்கு இலவசமாக தரும் பொருட்கள் தரமாக இருக்க வேண்டும் என்ற நோக்கம் இல்லாமல் கமிஷன் அடிக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் தொடங்கப்பட்ட இலவசங்களால் மக்களுக்கு கிடைத்த லாபத்தைவிட, அதிகாரத்தில் இருப்பவர்கள் அடித்த கொள்ளை பல மடங்கு அதிகமாகும்.

மிக்சி, கிரைண்டர், மின்விசிறி  திட்டத்தில், வழங்கப்பட்ட பொருட்கள் அனைத்துமே சில மாதங்களிலேயே பழுதடைந்து போய்விட்டது. இதற்கு காரணம், பொருட்களை தயாரிக்க தொழிற்சாலைகள் கூட இல்லாத  நிறுவனங்கள் ஏன், பருப்பு வியாபாரம் செய்கிறவர்களுக்கு அதிமுக அரசு டெண்டர் கொடுத்ததுதான். கோவையில் டெண்டர் கிடைக்காமல் கிரைண்டர் சங்கத்தினர் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டும் பலனளிக்கவில்லை. ஏனெனில், கமிஷன் அடிப்படையில் கொடுக்கப்பட்ட அனுமதிதான் முக்கிய காரணமாக அமைந்தது.

டெண்டர் பெற்றவர்கள் சீனாவில் இருந்து மலிவு விலையில் இறக்குமதி செய்து மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா படத்தை ஒட்டி, மஞ்சள் நிற அட்டை பெட்டியில் அடைத்து அரசுக்கு விநியோகம் செய்துள்ளனர். இதில், பல பொருட்கள் பயனாளிகள் அட்டை பெட்டிகளை திறக்கும் போதே உடைந்த நிலையில் இருந்தன. பொருட்கள் நன்றாக இருந்தாலும் மிக்சி, கிரைண்டர், பேன் போன்றவை 2,3 நாட்களிலேயே பழுதடைந்து ரூ.100க்கும் 200க்கும் எடைக்கு விற்கப்பட்டுவிட்டன. இந்த டெண்டரில் மட்டும் ரூ.8 ஆயிரம் கோடி முறைகேடு நடந்துள்ளதாக திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் கடந்த 2016ல் குற்றம் சாட்டினார். 



இந்நிலையில், தற்போது பழைய இரும்புக்கடையில் குவியல் குவியலாக வைக்கப்பட்டுள்ள இலவச கிரைண்டர்கள் பார்க்கும் போது, தரமற்ற பொருட்களை இலவசமாக மக்களுக்கு கொடுத்தால் வாக்கு வங்கி பெருகி மீண்டும் மக்களை கோமாளியாக்கலாம் என்பதை நிரூபிப்பதைப்போல் உள்ளது.

இன்னும் இலவசத்திற்கு ஆசைப்பட்டும், ஓட்டுக்கு பணம் பெற்றும், நாம், நம்  உரிமைகளை இழக்க போகிறோமா? என்பதை காலம் தான் முடிவு செய்யும்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...