நீதிமன்ற உத்தரவின்படி, விதிகளை மீறி கட்டப்பட்ட கட்டிடம் இடிப்பு

நீலகிரி மாவட்டம் உதகையில் விதிகளை மீறி கட்டப்பட்டதாக தொடரப்பட்ட கட்டிடம், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது.

நீலகிரி : நீலகிரி மாவட்டம் உதகையில் விதிகளை மீறி கட்டப்பட்டதாக தொடரப்பட்ட கட்டிடம், நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டது. 

உதகை குந்தா ஹவுஸ் சாலையில் எம்.சிவராஜ் என்பவருக்கு சொந்தமான வீடு உள்ளது. இந்த வீட்டின் பின்புற பகுதியில் அனுமதியின்றி கட்டிடம் கட்டப்பட்டதால், அப்பகுதியை நகராட்சி ஊழியர்கள் நேற்று இடித்தனர். நகராட்சி ஆணையர் சி.ரவி தலைமையில், நகராட்சி ஊழியர்கள், காவல் ஆய்வாளர் ரவீந்தரன் மற்றும் போலீஸ் பாதுகாப்பில் கட்டிடம் இடிக்கப்பட்டது. இதனால், அப்பகுதி பரபரப்பாக காணப்பட்டது. 

இது குறித்து நகராட்சி ஆணையர் சி. ரவி கூறியதாவது :- சிவராஜ் என்பவருக்கு சொந்தமான வீட்டின் பின்புறப் பகுதி விதிகளை மீறி அனுமதியின்றி கட்டப்பட்டதாக பி.ஜெயராம் என்பவர் உதகை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் தீர்ப்பு கடந்த வாரம் அளிக்கப்பட்டது. தீர்ப்பில் அனுமதியின்றி கட்டப்பட்ட பகுதியை இடிக்க உத்தரவிடப்பட்டது. அதன் பேரில், அனுமதியற்ற பகுதி இடிக்கப்பட்டது. இவ்வாறு கூறினார். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...