நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா நாளை தொடங்குகிறது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் மசினகுடி அருகே பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழா நாளை தொடங்குகிறது.

மசினகுடி அருகே பொக்காபுரம் மாரியம்மன் கோவில் உள்ளது. மிகவும் பிரசித்தி பெற்ற இந்த கோவில் அடர்ந்த வனப்பகுதிக்குளின் நடுவே அமைந்துள்ளது. இந்தக் கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் திருவிழா விமர்சியாக நடைபெறுவது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டு நாளை (வெள்ளிகிழமை) நடை திறப்புடன் இத்திருவிழா துவங்குகிறது. நாளை மறுநாள் மாலை திருவிளக்கு வழிபாடும், 25-ம் தேதி இரவு 8 மணியளவில் கங்கை பூஜையும் நடைபெறவுள்ளது.
பொக்காபுரம் மாரியம்மன் கோவில் திருவிழாவிற்கு நீலகிரி மாவட்ட மக்கள் மட்டுமில்லாமல் சமவெளி பிரதேசத்திலிருந்தும் பக்கதர்கள் வரவிருப்பதால், கோவில் நிர்வாகத்தின் சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், போலீஸார் சார்பாக பல்வேறு பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேவேளையில், பக்கதர்களின் வசதிக்காக உதகையிலிருந்து 50 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சிறப்பு பேருந்துகளில் உதகையிலிருந்து பொக்காபுரம் செல்ல ரூ.81-ம், கூடலூரிலிருந்து பொக்காபுரம் செல்ல ரூ. 30 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.