கோவை மாவட்ட வனச்சரகத்திற்குட்பட்ட வனத்துறையினருக்கு மனிதர் - யானை மோதலை தடுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.
கோவை: கோவை மாவட்ட வனச்சரகத்திற்குட்பட்ட வனத்துறையினருக்கு மனிதர் - யானை மோதலை தடுக்கும் சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது.

மேற்கு தொடர்ச்சி மலைக்காடுகளை ஒட்டியுள்ள கோவை மாவட்டத்தில் மனிதர் - யானை எதிர்கொள்ளல் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தபடி உள்ளது. வனத்தை விட்டு வெளியேறும் யானைகளின் நடமாட்டத்தை துல்லியமாக கண்டறிவதில் உள்ள சிக்கல்கள் காரணமாக ஏற்பட்ட மனித யானை மோதலில் கடந்த பன்னிரெண்டு மாதகாலத்தில் மட்டும் 19 மனித உயிர்களும், 22 யானைகளும் பலியாகியுள்ளன. மேலும், சுமார் 45 சதவிகித வேளாண் பயிர்களும் அழிக்கப்பட்டுள்ளன. இந்த அபாயகரமான சூழல் வரும் கோடை காலத்தில் ஏற்படும் வறட்சியால் மேலும் அதிகரிக்கவே வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இந்நிலையில், காட்டுயானைகளின் ஊடுருவலால் அதிகம் பாதிக்கப்பட்டு வரும் மேட்டுப்பாளையம், காரமடை, சிறுமுகை பகுதிகளின் வனச்சரகங்களில் பணியாற்றி வரும் வனத்துறையினருக்கு, யானைகளின் நடமாட்டத்தையும், அதன் எண்ணிக்கை மற்றும் இயல்புகள் குறித்து துல்லியமாக கண்டறிதல் குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டது. உலகளாவிய இயற்கைக்கான நிதியம் சார்பில் [WWF] வனத்துறை அதிகாரிகள், ஊழியர்கள், வேட்டை தடுப்பு காவலர்கள் ஆகியோருக்கு வழங்கப்பட்ட இப்பயிற்சியில் அனைவருக்கும் எளிமையாகப் புரியும் வகையில், திரையில் காட்சிகள் மூலம் விளக்கப்பட்டது.

தொடர்ந்து, இடம் மாறியபடி சுற்றி வரும் யானைகளை சரியாக கணக்கிடுவது எப்படி, வேளாண் பயிர்களை உண்டு பழகியதன் காரணமாகவே மீண்டும் மீண்டும் விளைநிலங்களை நோக்கிப் படையெடுக்கும் யானைகளைக் கண்டறிதல், மனிதர்களை எதிர்கொண்டால் ஆவேசமாக தாக்க முற்படும் யானைகளை மட்டும் தனியாக பிரித்து கணக்கிடுதல், அவற்றைப் புகைப்படம் எடுக்கும் முறை, மனித யானை மோதலை தடுக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் இதுபோன்ற நிகழ்வுகளின் போது யாருக்கும் பாதிப்பின்றி யானைகளைக் காட்டுக்குள் விரட்ட எடுக்கப்படவேண்டிய திட்டங்கள், குறித்து வனத்துறையினருக்கு பயிற்சியளிக்கப்பட்டது. இந்த புதிய முயற்சி மூலம் கொடுக்கப்படும் பயிற்சியால் வரும் காலங்களில் யானை மனித மோதல்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.