விசைத்தறி நெசவு கூலி ஒப்பந்தம் தொடர்பாக சுமூக பேச்சுவார்த்தை நடத்த வலியுறுத்தல்

கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி நெசவு கூலி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

திருப்பூர்: கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி நெசவு கூலி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே. வாசன் வலியுறுத்தியுள்ளார்.

திருப்பூரில் த.மா.கா. நிர்வாகி இல்ல திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக திருப்பூர் அவர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவர் பேசுகையில், காவிரி பிரச்சினை தொடர்பாக தமிழக அரசு கூட்டி உள்ள அனைத்து கட்சி கூட்டத்தில் த.மா.கா. பங்கேற்கும். இந்தக் கூட்டத்தின் மூலமாக விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு ஆக்கப்பூர்வமான முடிவுகள் எடுக்கப்படும் என்று நம்புகிறேன். மேலும் இந்தக் கூட்டத்தில் விவசாய பிரதிநிதிகள் கலந்து கொள்ள உள்ளது கூட்டத்திற்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்தி உள்ளது.

இன்றும் மற்றும் நாளையும் நடைபெற உள்ள கோவை, திருப்பூர் மாவட்ட விசைத்தறி நெசவு கூலி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை சுமூகமாக நடைபெற வேண்டும். தமிழக அரசு விசைத்தறி தொழிலாளர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நல்ல முடிவுகள் எடுக்க வேண்டும். 

தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களில் உள்ள அரசு பள்ளிகளுக்கும் வை-பை வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்பது மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. இது மாணவர்களின் வருங்கால கல்விக்கு உதவும் வகையில் அமையும் என்று த.மா.கா. கருதுகிறது. 4 மாவட்டங்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ள இந்த வை-பை வசதி எந்த பயனையும் தராது. 

பிறப்பு, இறப்பு சான்றிதழுக்கான கட்டண உயர்வு ஏற்புடையது அல்ல. உடனடியாக பழைய கட்டணத்தை அமல்படுத்துவதற்கு சம்பந்தப்பட்ட துறைக்கு தமிழக அரசு உத்தரவிட வேண்டும். சிறுமி ஹாசினி கொலை வழக்கில் குற்றவாளிக்கு நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கி இருப்பது வரவேற்கத்தக்கது. இந்த வழக்கில் மேல் முறையீட்டிற்கு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. புதிய கட்சியை தொடங்கி உள்ள நடிகர் கமலஹாசன் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு த.மா.கா. சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு ஜி.கே.வாசன் கூறினார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...