காஞ்சிபுரம் அருகே அழுகிய நிலையில் இறந்த சடலத்தை மறைத்து கடத்திய தனியார் தொண்டு நிறுவனத்தில் வருவாய் கோட்டாச்சியர் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட அனைத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
காஞ்சிபுரம் அருகே அழுகிய நிலையில் இறந்த சடலத்தை மறைத்து கடத்திய தனியார் தொண்டு நிறுவனத்தில் வருவாய் கோட்டாச்சியர் தலைமையில் 60-க்கும் மேற்பட்ட அனைத்துறை அதிகாரிகள் ஆய்வு நடத்தினர்.
சாலவாக்கம் அடுத்த பாலேஸ்வரம் பகுதியில் ஆதரவற்ற இறக்கும் தருவாயில் உள்ள முதியோர்களைப் பராமரிக்கும் பணியை தனியார் தொண்டு நிறுவனம் செய்து வருகிறது. இந்நிறுவனம் மீது அடிக்கடி பல்வேறு சந்தேக புகார்களை அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்து வந்தனர். இந்த நிலையில், நேற்று எடையம்புத்தூர் காட்டு சாலை வழியாக அந்நிறுவனத்குரிய வேன் சென்றது. அப்போது, வேனிலிருந்து காப்பாற்றக் கோரி அலறல் சத்தம் கேட்டதால், அப்பகுதியினர் இருசக்கர வாகனத்தில் துரத்துச் சென்று வேனை மடக்கி பிடித்தனர்.
அந்த வேனில் திண்டுக்கல் பகுதியை சேர்ந்த செழியன் மற்றும் திருவள்ளூர் கூவம் பகுதியை சேர்ந்த கண்ணம்மாள் என்ற இரு முதியவர்கள் மீட்கப்பட்டனர். அப்போது, அந்த வேனில் அழுகிய நிலையில் காய்கறிகளுக்கிடையே ஆண் சடலம் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர், இது குறித்து சாலாவாக்கம் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்து, வேனையும், அந்த ஆண் சடலத்தையும் ஒப்படைத்துள்ளனர். இது குறித்து விசாரணை செய்து வரும் போலீஸார், முதல்கட்ட தகவலில் ஓட்டுநர் ராஜேஷை கைது செய்துள்ளனர்.
இதனிடையே, பொதுமக்கள் அளித்த புகாரின் பேரில் காஞ்சிபுரம் வருவாய் கோட்டாச்சியர் ராஜூ தலைமையில் 60 மேற்பட்ட அனைத்து துறை அதிகாரிகள், அப்பகுதி மக்கள் சிலர் இன்று 11 மணியளவில் ஆய்வு மேற்கொள்ள துவங்கியுள்ளனர். இதில், அங்கு தங்கியுள்ளோரின் நிலை மற்றும் அவர்களின் விருப்பம் குறித்தும், அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவம் மற்றும் முறையான ஆவணங்கள் பற்றியும் ஆய்வு செய்யவுள்ளதாக வருவாய் கோட்டாட்சியர் தெரிவித்துள்ளார். அந்த வளாகத்தில் காவல்துறை பாதுகாப்பிற்காக நிறுத்தப்பட்டனர்.