கோவை மாநகராட்சியில் புதியதாக இணைக்கப்பட்ட மாநகராட்சி பகுதியான குறிச்சி பகுதியில் ரூ.76 கோடி மதிப்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்கும் பணியினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.
கோவை : கோவை மாநகராட்சியில் புதியதாக இணைக்கப்பட்ட மாநகராட்சி பகுதியான குறிச்சி பகுதியில் ரூ.76 கோடி மதிப்பில் மேல்நிலை நீர்தேக்க தொட்டிகள் அமைக்கும் பணியினை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத்திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தெரிவிக்கையில், கோவை மாவட்டத்தில் மற்றும் மாநகராட்சிப் பகுதி மக்களுக்கு தண்ணீர் தேவைகளைப் பூர்த்திசெய்யும் பொருட்டு பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தண்ணீர் ஒரு மனிதனின் அத்தியாவசிய தேவை என்பதால், அதனைக் கருத்தில் கொண்டு தண்ணீரை தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி, பில்லூர் கூட்டுக்குடிநீர் திட்டம், அத்திக்கடவு கூட்டுக்குடிநீர் திட்டம் போன்ற பல்வேறு திட்டங்கள் ஜெயலலிதா அரசால் கோவை மாவட்ட மற்றும் மாநகராட்சி மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய இயற்றப்பட்ட மகத்தான சாதனைத் திட்டங்களாகும். இத்திட்டங்களால் ஆண்டுகள் பல கடந்தாலும், இப்பகுதி மக்களுக்கு சீராக குடிநீர் வழங்க இயலும்.
அதன்படி, புதியதாக இணைக்கப்பட்ட மாநகராட்சி பகுதிகளான பிள்ளையார்புரத்தில் தொகுப்பு வீடுகளுக்கு அருகில் ரூ.4.75 கோடி மதிப்பில் 20 லட்சம் கொள்ளளவு கொண்ட சமநிலை நீர்தேக்க தொட்டியும், ரூ. 62 லட்சம் மதிப்பில் 2.50 லட்சம் கொள்ளளவு கொண்ட 2 இடங்களில் தரைமட்ட நீர்தேக்க தொட்டியும், ரூ. 62 லட்சம் மதிப்பில் அறிவெளி நகர், ஈடன் என்க்லேவியில் 2.50 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டியும், கிருஷ்ணா நகர், (பண்டிட் நேரு பள்ளி அருகில்) மகேஷ்வரி கார்டன் பகுதியில் 5லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி ரூ.97 லட்சம் மதிப்பிலும், குறிச்சி ஹவுசிங்யூனிட், வீட்டு வசதி வாரிய குடியிருப்பு மைதானம் மற்றும் ஈச்சனாரி, மஹாலஷ்மி மந்திர் எதிரில் உள்ள, அய்யப்பா நகர் பகுதியிலும், வெள்ளலூர் ரோடு, முல்லை நகர் பத்மாலயா கார்தான் லே அவுட் பகுதியிலும், தலா 7.50 லட்சம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி ரூ.3.90 கோடி மதிப்பிலும் அமைக்கப்பட உள்ளது.
இதேபோல, கார்மல் நகர் தெற்கு பகுதியில் 15 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி ரூ. 2.38 கோடி மதிப்பிலும், முத்தையா நகரில் 2.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி ரூ. 62 லட்சம் மதிப்பிலும், எல்.ஐ.சி., காலனி, பூங்கா அருகிலும், லோகநாதபுரம், ஆண்டாள் தோட்டம் அருகிலும் தலா 20 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி ரூ.9.50 கோடி மதிப்பிலும், மாச்சம்பாளையம், துளசி கார்டன் பகுதியில் 12.50 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி ரூ.2.04 கோடி மதிப்பிலும் என 12 பகுதிகளில் மேல்நிலைநீர்தேக்க தொட்டிகள் கட்டும் பணிகளைத் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன், சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம், மாநகராட்சி துணை ஆணையர் காந்திமதி, மேற்பார்வை பொறியாளர் சொக்கலிங்கம், நிர்வாக பொறியாளர் சம்பத்குமார் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.