வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்காக உதகையில் முதன் முறையாக 5 மொழிகளில் தகவல் பலகைகள் படகு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
நீலகிரி : வெளிமாநில சுற்றுலா பயணிகளுக்காக உதகையில் முதன் முறையாக 5 மொழிகளில் தகவல் பலகைகள் படகு இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நீலகிரி மாவட்டத்திற்கு ஆண்டுதோறும் பல லட்சக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். தமிழகம் மட்டுமின்றி பிற மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். மேலும், நீலகிரி மாவட்டம் தமிழகம், கேரளம் மற்றும் கர்நாடக மாநில எல்லையோரம் இருப்பாதால் கேரள மற்றும் கர்நாடக மாநிலத்திலிருந்தும் அதிகப்படியான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.

பல்வேறு பகுதிகளிலிருந்து வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வண்ணம் மாவட்ட நிர்வாகம், தோட்டக்கலை துறை மற்றும் சுற்றுலா துறையின் சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதனடிப்படையில், சுற்றுலா பயணிகளுக்காக முதன்முறையாக உதகை படகு இல்லத்தில் ஆங்கிலம், தமிழ், மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் தகவல் பலகைகள் வைக்கப்பட்டுள்ளன. தற்போது, படகு இல்ல நுழைவாயில் பகுதியில் மட்டும் இந்த 5 மொழி தகவல் பலகை வைக்கப்பட்டுள்ள நிலையில், வரும் காலங்களில் படகு இல்லத்தில் முக்கிய பகுதிகளை குறிக்கும் தகவல் பலகைகள் வைக்கப்பட உள்ளதாக படகு இல்ல நிர்வாகத்தின் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.