குறுகிய காலத்தில் வேகமாய் வளரும் புதிய ரக மலைவேம்பு மரம் அறிமுகம்

குறுகிய காலத்தில் வேகமாய் வளர்ந்து அதிக மரக்கூழ் தரக்கூடிய புதிய மலைவேம்பு மர ரகத்தை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் வேளாண் அறிவியலாளர்கள் உருவாக்கி அறிமுகம் செய்துள்ளனர்.

கோவை : குறுகிய காலத்தில் வேகமாய் வளர்ந்து அதிக மரக்கூழ் தரக்கூடிய புதிய மலைவேம்பு மர ரகத்தை கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தின் வேளாண் அறிவியலாளர்கள் உருவாக்கி அறிமுகம் செய்துள்ளனர். 



பிளைவுட், தீக்குச்சி, காகித உற்பத்தி என பல்வேறு பொருட்களின் தயாரிப்பிற்கு முக்கிய மூலப்பொருளாக பயன்படுத்தப்படும் மலைவேம்பின் தேவை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே உள்ளது. ஆனால், தேவையை ஒப்பிடும்போது, இதன் உற்பத்தி குறைவாகவே உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இயற்கையான மலைவேம்பு மரங்கள் வளர்ந்து பலன்தர பத்தாண்டுகள் வரை ஆகும் என்பதால், இதனை வளர்ப்பதில் விவசாயிகள் ஆர்வம் காட்டவில்லை. 

இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாடு வேளாண் பல்கலைகழகத்தின் கீழ் இயங்கும் மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் சில ஆண்டுகளுக்கு முன்னர் “மேட்டுப்பாளையம்-1” என்ற மலைவேம்பு ரகத்தை உருவாக்கி விவசாயிகளுக்கு அறிமுகம் செய்தது. இவை ஐந்தாண்டுகளில் வளர்ந்து பலன் தரும், இவ்வகை மரங்கள் பிளைவுட் தயாரிப்பிற்கு மட்டுமே பயன்தரும். அறுவடைக்கு ஐந்து முதல் ஆறாண்டுகள் ஆகும் என்பதால் சில விவசாயிகள் மட்டுமே இம்மர வளர்ப்பில் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையில், தற்போது மேலும் வேகமாக வளர்ந்து வெறும் பதினெட்டு மாதங்களில் அறுவடைக்கு தயாராகும் வகையிலான புதிய க்ளோனிங் ரக மலைவேம்பு மரத்தை உருவாக்கி, அதனை விவசாயிகளுக்கு அறிமுகம் செய்துள்ளனர் மேட்டுப்பாளையம் ஆராய்ச்சி நிலைய வேளாண் வல்லுநர்கள். “மேட்டுப்பாளையம்-2” என பெயரிடப்பட்டுள்ள இவ்வகை மரங்கள் ஒரே வருடத்தில் 12 மீட்டர் உயரத்திற்கும் 45 செ.மீட்டர் சுற்றளவும் கொண்டதாக வளர்கிறது என்பதோடு, பழைய ரகத்தை போல் பிளைவுட் தயாரிப்பிற்கு மட்டுமல்லாமல், தீக்குச்சி, காகித தயாரிப்பிற்கும் பயன்படுத்தலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

தைல மரத்தைக் காட்டிலும் அதிக காகித கூழ் மகசூலை அளிக்கின்றது. மரம் சார்ந்த தொழிற்சாலைகள் மலைவேம்பை ஒரு டன் ஒன்பதாயிரம் முதல் பத்தாயிரம் ரூபாய் வரை விலை கொடுத்து வாங்கும் நிலையில், இப்புதிய ரக மரங்கள் நடவு செய்தால் ஒரு ஏக்கருக்கு ஐம்பது முதல் அறுபது டன் வரை ஒன்றரை ஆண்டுகளில் கிடைக்கும். இதனால், விவசாயிகள் குறைந்த காலத்தில் அதிக பலன் பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

மேலும், வேளாண் காடுகள் வளர்ப்பு திட்டத்தின் கீழ் இப்புதிய ரக மலைவேம்பு மர வளர்ப்பில் ஆர்வம் காட்டும் விவசாயிகள், மேட்டுப்பாளையம் வனக்கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தை அணுகினால், மலைவேம்பை பயிரிட வேளாண் தொழில் நுட்ப உதவி, வங்கி கடன் உதவி, மரங்களுக்கான காப்பீடு, அறுவடை முடிந்தவுடன் தொழிற்சாலைகளுக்கு நேரடி விற்பனைக்கான ஒப்பந்தம் என அனைத்து வகையிலும் உதவிகள் செய்து விவசாயிகளுக்கான வருவாய் உறுதி செய்யப்படும் என்கின்றனர் தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக அதிகாரிகள். பல்வேறு சூழல்களின் காரணமாக வேளாண் நிலங்கள் தரிசாக கிடப்பதை தடுக்கவும், காடுகளை தாண்டி மரங்கள் வளர்ப்பை ஊக்குவிக்கவும், விவசாயிகள் உறுதியளிக்கப்பட்ட பலன் பெறவும், இது போன்ற திட்டங்கள் உதவும் என்றும் தெரிவிக்கின்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...