கோவையில் குறைந்த முதலீட்டில், அதிக லாபம் தரும் வகையில் தொழில்களை தொடங்க நினைக்கும் தொழில்முனைவோர்களுக்கு கோவை மாநகராட்சி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

நகரை தூய்மையாக வைக்கும் வகையில், பிளாஸ்டிக் பயன்பாடு அல்லாத மக்கும் தன்மையுடைய காகித டம்ளர்கள், தட்டுகள் போன்றவை கோவை ஸ்மார்ட்சிட்டி லிமிடெட் சார்பில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த காகித டம்ளர்கள் மற்றும் தட்டுகள், மற்ற தர பொருட்களைக் காட்டிலும் அதிக விலைக்கு விற்பனைக்கு எடுத்துக் கொள்ளப்படுகிறது.

இந்த நிலையில், பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, நகரின் வளத்தைப் பெருக்குவதற்காகவும், குறைந்த முதலீட்டில் அதிகம் லாபம் தரும் இந்த தொழிலைப் பிரபலப்படுத்துவதற்காகவும், தொழில் தொடங்க ஆர்வாக உள்ள தொழில்முனைவோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வரும் 23-ம் தேதி மாலை 6 மணிக்கு நடைபெறும் இந்த நிகழ்ச்சி அவினாசிலிங்கம் மகளிர் கல்லூரிக்கு எதிரே உள்ள அன்னபூர்ணா ஓட்டல் அரங்கில் நடக்கிறது.
இந்த நிகழ்ச்சியின் போது, மக்கும் தன்மையுடைய காகித டம்ளர்கள், தட்டுகள் போன்றவை பார்வைக்கு வைக்கப்பட உள்ளன. இதில், மாநகராட்சி ஆணையர் டாக்டர். க. விஜயகார்த்திகேயன், எகோ கோட்டிங்ஸ் லிமிடெட் நிறுவனத்தைச் சேர்ந்த சுபா ராவ் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.