அடிப்படை வசதிகளும் இன்றி தவிக்கும் கிராம மக்கள் : வனவிலங்குகளின் அச்சுறுத்தலில் திக், திக் வாழ்க்கை...!

நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெல்வியூ கிராமத்தில் அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் பொதுமக்கள், வனவிலங்குகளின் அச்சுறுத்தலில் வாழ்க்கையைக் கழித்து வருகின்றனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டத்தில் உள்ள பெல்வியூ கிராமத்தில் அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் பொதுமக்கள், வனவிலங்குகளின் அச்சுறுத்தலில் வாழ்க்கையைக் கழித்து வருகின்றனர். 

நடுவட்டம் பேரூராட்சியில் உள்ளது பெல்வியூ கிராமம். இக்கிராமத்தில் சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்த நிலையில், தங்களது வாழ்வாதாரத்திற்காக சமவெளி பிரதேசங்களுக்குப் பல குடும்பங்கள் இடம் பெயர்ந்துவிட்டனர். இதனால், தற்போது வெறும் 40 குடும்பங்களே வசித்து வரும் நிலை ஏற்பட்டுள்ளது. இக்கிராமத்தில் வாழ்வாதாரமாக தேயிலை விவசாயம் மட்டுமே தான் உள்ளது. இங்கு கடந்த 40 ஆண்டுகளுக்கு முன் தனியார் தேயிலை தொழிற்சாலை இயங்கி வந்தது. இதில், வெளி மாவட்டங்களில் இருந்து பிழைப்பு தேடி வந்தவர்கள் பணி புரிந்து வந்தனர்.



தொழிற்சாலை நிர்வாகம் சார்பில் பணியாளர்களுக்கு குடியிருப்புகள் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டன. இந்த நிலையில், தொழில் நலிவடைந்ததால், தனியார் தேயிலை தொழிற்சாலை மூடப்பட்டது. இதனால், அங்கு பணிபுரிந்த சுமார் 150-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வேலை இல்லாமல் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் முடங்கியது. இதனால், கடந்த 30 ஆண்டுகளாக தேயிலை செடிகளுக்கு நடுவே உள்ள புதர் செடிகளை அகற்றுவதனால் வரும் கூலியை வைத்தே, அவர்கள் தங்களது குடும்பங்களை நடத்தி வருகின்றனர்.



இதனிடையே, பழைய தொழிற்சாலை நிர்வாகம் மூலம் அனைத்து அடிப்படை வசதிகளும் கிடைத்ததாகவும், இந்தத் தொழிற்சாலை மூடி 30 வருடங்களாக குடிநீர் வசதி, மின்சார வசதி, சாலை வசதி, பள்ளிக்கூடம், மருத்துவமனை போன்ற வசதிகள் இல்லாமல் பெரிதும் இன்னல்களுக்கு ஆளாகி வருவதாக இக்கிராம மக்கள் கவலையுடன் தெரிவிக்கின்றனர்.



குறிப்பாக, கடந்த 30 வருடங்களாக தேர்தல் நேரங்களில் மட்டும் தங்களது கிராம மக்களை சந்திக்கும் கட்சியினர், வெற்றி பெற்ற பிறகு யாரும் தங்களை பார்ப்பதில்லை என பெல்வியூ கிராம மக்கள் குற்றம்சாட்டுகின்றனர். கர்ப்பிணி பெண்களோ அல்லது அவசர சிகிச்சைக்காக மருத்துவனைக்கு செல்ல வேண்டுமானால், உதகை அல்லது கூடலூர் பகுதிக்கு தான் செல்ல வேண்டியநிலை இருப்பதாகவும், தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற எந்தவித அரசு சலுகைகள் கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டையும் அவர்கள் முன் வைக்கின்றனர்.

மேலும், வனப்பகுதியைச் சேர்ந்த இடமாக உள்ளதால் காட்டு யானை, புலி, சிறுத்தை, கரடி போன்ற வனவிலங்குகளின் அச்சுறுத்தல் இருப்பதாகவும், காட்டு யானைகள் அவ்வப்போது ஊருக்குள் புகுந்து வீடுகளை சேதம் செய்து வருவதாகவும் அவர்கள் கூறுகின்றனர். இரவு நேரங்களில் மின்சார வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுவதாகவும், தங்களது பிள்ளைகளை படிக்க வைக்க வேண்டுமானால், 4 கிலோ மீட்டார் வனப்பகுதி சாலை வழியாக டி.ஆர். பஜார் மற்றும் 28 கி.மீ தள்ளியுள்ள கூடலூர் பகுதிக்குதான் சென்று படிக்க வேண்டிய நிலை இருப்பதாக வேதனைத் தெரிவித்த அவர்கள், சரியான நேரத்தில் அரசு பேருந்துகளும் இயக்கப்படுவதில்லை எனக் குற்றம்சாட்டுகின்றனர்.



Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...