காவிரி விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை நடக்க உள்ள கூட்டத்தில் பங்கேற்க விவசாய சங்கங்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி. தண்ணீரை திறந்து விட வேண்டும் என உச்சநீதிமன்றம் கடந்த வாரம் உத்தரவிட்டிருந்தது. தமிழகத்திற்கு ஏற்கனவே நடுவர் நீதிமன்றம் 192 டி.எம்.சி. தண்ணீர் வழங்க வேண்டும் என்று கூறி இருந்த நிலையில், தற்போது வெளியான தீர்ப்பில் 14.75 டி.எம்.சி. குறைக்கப்பட்டு 177.25 டி.எம்.சி. தமிழகத்திற்கு வழங்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், காவிரி மேலாண்மை வாரியத்தை 6 வாரங்களுக்குள் அமைக்க வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது.
இவ்விவகாரம் தொடர்பாக அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட பல்வேறு கட்சித்தலைவர்கள் வலியுறுத்தியிருந்தனர். மேலும், எதிர்கட்சித் தலைவர் ஸ்டாலின் தலைமையில் 23-ம் தேதி அண்ணா அறிவாலயத்தில் அனைத்துக்கட்சி கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்திற்கு, அ.தி.மு.க., பா.ஜ.க., உள்ளிட்ட கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்க முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடக்கும் என தமிழக அரசு அறிவித்தது. இதனால், திமுக தனது அறிவிப்பை ரத்து செய்தது.
தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நாளை காலை 10.30 மணிக்கு நடக்க உள்ள அனைத்து கட்சிக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட கட்சியின் தலைவர்கள், பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ள விவசாய சங்க பிரதிநிதிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும், அவர்களது கோரிக்கைகளை கேட்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனை ஏற்றுக் கொண்ட தமிழக அரசு, விவசாய சங்கங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.