திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்புறத்தில் கார் மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருப்பூர் : திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே சாலையில் நின்று கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்புறத்தில் கார் மோதிய விபத்தில் பெண் உள்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியிலிருந்து காங்கேயம் சென்று கொண்டிருந்த திருநெல்வேலி உட்கோட்ட அரசு பேருந்து, தாராபுரம் கோனேரிபட்டி பிரிவில் நேற்று இரவு பழுதாகி நின்று கொண்டிருந்தது. இந்த நிலையில், அவ்வழியாக வேகமாக வந்த ஆம்னி கார், சாலையில் நின்று கொண்டிருந்த பேருந்தின் பின்புறம் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இதில், பயணம் செய்த சின்ன கருப்புதேவர் (55), செல்லம்மாள் (45) ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

மேலும், ரமேஷ் (30), ஜெயகனி (25), ஹமா (5), அகிலேஷ் (3) மற்றும் கார் ஓட்டுநர் கணேசன் (28) ஆகிய 5 பேர் தாராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். இதில், ஹமா என்ற 5 வயது பெண் குழந்தை மேல் சிகிச்சைக்காக கோவையில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டது. இந்த விபத்து தொடர்பாக, தாராபுரம் போலீஸார் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.