வரும் 27-ம் தேதி தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

கோவை மாவட்டத்தில் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ள வேலை வாய்ப்பு முகாமினை, படித்த மற்றும் பயிற்சி பெற்ற இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார்.

கோவை : கோவை மாவட்டத்தில் வரும் 27-ம் தேதி நடைபெறவுள்ள வேலை வாய்ப்பு முகாமினை, படித்த மற்றும் பயிற்சி பெற்ற இளைஞர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சியர் த.ந. ஹரிஹரன் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம், திட்ட செயலாக்க அலுவலகம் (மகளிர் திட்டம்) மற்றும் கோவை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் இணைந்து வேலைவாய்ப்பு வழங்கும் முன்னணி தொழில் நிறுவனங்களைக் கொண்டு நடத்தும் படித்த மற்றும் பயிற்சி பெற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் வரும் 27-ம் தேதி காலை 08.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை ஈச்சனாரி கற்பகம் பல்கலைக்கழகம் வளாகத்தில் அமைந்துள்ள திருமந்திரம் கலையரங்கில் நடைபெறவுள்ளது. 

இவ்வேலைவாய்ப்பு முகாமில் வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய பல்வேறு முன்னணி தனியார் நிறுவனங்களான ஐ.டி., இன்டஸ்ட்ரிஸ், ஆட்டோ மொபைல் கார்மென்ட்ஸ், கட்டுமானம் மற்றும் விற்பனைத் துறை சார்ந்த நிறுவனங்கள் கலந்து கொண்டு வேலைவாய்ப்புகளை வழங்குகிறது. எனவே, 8-வது முதல் தொழில்நுட்பக் கல்வி, பட்டயப்படிப்பு, இளங்கலை மற்றும் முதுகலை பயின்றவர்கள் மற்றும் வேலைவாய்ப்பற்ற படித்த இளைஞர்கள் தவறாது தங்கள் கல்வி சான்றிதழ், ஆதார் அட்டை, பயோடேட்டா, புகைப்படம் மற்றும் இதர தகுதி சான்றுகளுடன் (அசல் மற்றும் நகல்களுடன்) கலந்து கொண்டு பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...