முன்னாள் துணைவேந்தர் கணபதி ஜாமின் கோரி மீண்டும் மனு

பேராசிரியர் நியமன லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதியின் சார்பில் இரண்டாவது முறையாக ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கோவை: பேராசிரியர் நியமன லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாரதியார் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் கணபதியின் சார்பில் இரண்டாவது முறையாக ஜாமின் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியர் பணி வழங்க ரூ.30 லட்சம் லஞ்சம் வாங்கிய போது, அப்பல்கலைக்கழக துணைவேந்தர் கணபதியை லஞ்ச ஒழிப்புத்துறை போலீஸார் கையும் களவுமாக கைது செய்தனர். அவருக்கு உதவி செய்த பேராசிரியர் தர்மராஜும் கைது செய்யப்பட்டார். இருவரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் சார்பில் ஜாமின் கோரி ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த மனுவை கடந்த 8-ஆம் தேதி விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட கோவை ஊழல் தடுப்பு வழக்குகள் நீதிமன்றம், அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால், ஜாமின் மனுவை நிராகரித்தது. 

இதனால், கடந்த வாரம் கணபதியை 4 நாள் காவலில் எடுத்து கோவை லஞ்ச ஒழிப்பு போலீஸார் விசாரணை நடத்தினர். இந்த நிலையில், இன்று ஜாமின் கேட்டு இரண்டாவது முறையாக முன்னாள் துணைவேந்தர் கணபதியின் வழக்கறிஞர் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீதான விசாரணை தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...