கோவை உள்ளிட்ட 4 மாவட்டப் பள்ளிகளில் வை-பை வசதி

கோவை, சென்னை, உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள 318 அரசு பள்ளிகளில் வை-பை வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார்.

கோவை, சென்னை, உள்ளிட்ட 4 மாவட்டங்களில் உள்ள 318 அரசு பள்ளிகளில் வை-பை வசதி ஏற்படுத்தப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்துள்ளார். 

இது தொடர்பாக, கோவை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் 318 பள்ளிகளில் ஏக்ட் ஃபைபர்நெட் (ACT Fibernet) நிறுவனத்தின் உதவியுடன் இலவச வை-பை வசதி செய்வதற்கான உடன்படிக்கை கையொப்பமாகியுள்ளது. இதில், தமிழகப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வித்துறைச் செயலாளர் பிரதீப் யாதவ் ஆகியோரும், ஏக்ட் ஃபைபர்நெட் நிறுவனத்தின் சார்பில் பாலமல்லாடி, நாராயணன், சுனில் யாஜ்மன் ஆகியோரும் கையொப்பமிட்டனர்.

அதன்பின் செய்தியாளர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் பேசுகையில், 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கான புதிய பாடத்திட்டங்கள் தயாரிக்கும் பணி மார்ச் முதல்வாரம் நிறைவடையும். கோவை, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் 318 அரசு பள்ளிகளில் வை-பை வசதி ஏற்படுத்தப்பட உள்ளது. மாநிலம் முழுக்க இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...