சிறுமி ஹாசினி கொலை செய்யப்பட்டது முதல் குற்றவாளி தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது வரை...!

சிறுமி ஹாசினி கொலை செய்யப்பட்டது முதல் குற்றவாளி தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை விதிக்கப்பட்டது வரை...!

• 2017 பிப்ரவரியில், சென்னை முகலிவாக்கம் அருகே, வீட்டின் வாசலில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி ஹாசினி மாயமானார்.

* சிசிடிவி காட்சிகளை வைத்து அதே குடியிருப்பில் வசித்து வந்த தஷ்வந்த்திடம் போலீசார் விசாரணை நடத்தினர்.



* விசாரணையில் ஹாசினியை கடத்தி பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக் கொண்டார் தஷ்வந்த்.

* சம்பவத்தின்போது, ஹாசினி கூச்சலிட்டதால் போர்வையால் அழுத்தி தஷ்வந்த் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது.



* ஹாசினியின் உடலை மீது பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டதாக போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்தார் தஷ்வந்த். 

* இதையடுத்து தஷ்வந்த கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

* தஷ்வந்த் மீது குண்டர் சட்டம் பாய்ந்த நிலையில், 6 மாதம் கழித்து குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது.

* தஷ்வந்த் கைது செய்யப்பட்டு 3 மாதத்துக்குள் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யாததால், ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.



* ஜாமினில் வெளிவந்த தஷ்வந்த் குன்றத்தூரில் வசித்து வந்த பெற்றோருடன் தங்கியிருந்தார்.

* இந்நிலையில், 2017 டிசம்பரில் தஷ்வந்தின் தாயார் சரளா கொலை செய்யப்பட்டார். மேலும், நகைகள் கொள்ளை போயிருந்தது.

* போலீசார் விசாரணையில் நகைக்காக பெற்ற தாயை தஷ்வந்த கொன்றது தெரியவந்தது.



* இதையடுத்து, மும்பையில் பதுங்கியிருந்த தஷ்வந்தை தனிப்படை போலீசார் பிடித்தனர்.

* அப்போது, தனிப்படை போலீசாரிடம் இருந்து தஷ்வந்த் தப்பியோடியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

* தப்பிய தஷ்வந்தை மீண்டும் போலீசார் கைது செய்தனர், தாய் சரளாவை கொன்ற குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டார்.



* செங்கல்பட்டு நீதிமன்றத்தில், ஹாசினி கொலை வழக்கின் விசாரணை முடிவுற்றதை அடுத்து, இன்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

• போரூர் சிறுமி ஹாசினி பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொல்லப்பட்ட சம்பவம் 

• குற்றவாளி தஷ்வந்த்துக்கு எதிராக ஆள்கடத்தல், கொலை, தடயங்களை மறைத்தல், பாலியல் தொல்லை குற்றச்சாட்டு பதிவு

• குழந்தைக்கு எதிரான பாலியல் வன்கொடுமை (போக்ஸோ) சட்டத்தில் 4 பிரிவுகளில் குற்றம் நிரூபணம்

• குற்றவாளி என அறிவிக்கப்பட்ட தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை விதித்து செங்கல்பட்டு மகளிர் நீதிமன்றம்



• கொலைக்குற்றத்திற்கு தூக்கு தண்டனையும், மற்ற குற்றங்களுக்கு மொத்தம் 31 ஆண்டுகளும் தண்டனை : வழக்கறிஞர் கண்ணதாசன்

• தஷ்வந்த்துக்கு விதிக்கப்பட்ட தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்தால் எதிர்கொள்வோம் : கண்ணதாசன்

• தீர்ப்பைக் கேட்டு, சிறுமியின் புகைப்படத்தை செல்போனில் பார்த்தபடி, கண்ணீர் விட்டு கதறி அழுத ஹாசினியின் தந்தை பாபு

• தனது மகள் கொல்லப்பட்ட வழக்கில் நியாயம் கிடைத்துள்ளதாக சிறுமியின் தந்தை பேட்டி 

• தஷ்வந்த்துக்கு தூக்குதண்டனை விதித்த நீதிபதி வேல்முருகனுக்கு ஆதரவாக மக்கள் முழக்கம்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...