வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி செங்கல் சூலை ஊழியர்கள் மனு

கோவை தடாகம் பகுதியிலுள்ள செங்கல் சூலையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஊழியர்கள், வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: கோவை தடாகம் பகுதியிலுள்ள செங்கல் சூலையில் பல ஆண்டுகளாக பணிபுரிந்து வரும் ஊழியர்கள், வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என வலியுறுத்தி மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 



கணுவாய், தடாகம் உள்ளிட்ட பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூலைகள் செயல்பட்டு வருகின்றன. அங்கு, பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணிபுரிந்து வரும் நிலையில், அவர்களுக்கு சூலை நிர்வாகங்கள் சார்பில் மொத்த குடியிருப்புகள் ஏற்படுத்தி தரப்பட்டுள்ளன. இந்த சூழலில் தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள சிறிய அறையிலான குடியிருப்புகள் பாதுகாப்பு இல்லாமலும் எவ்வித வசதியும்  இல்லாமலும் இருப்பதால் தங்களுக்கு அரசு வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். மேலும் தங்கள் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்து ஆட்சியர் நடவடிக்கை மேற்கொள்வார் என நம்புவதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...