கோவையில் உள்ள சேன்ஞ் டிரஸ்ட் நிறுவனர் திருநங்கை தஸ்லீமா நஸ்ரினுக்கு கோவை கிளப் ரோட்டரி மேட்ரோ பாலிஸ் சார்பாக 'ரியல் ஹிரோஸ்' விருதும் 50 ஆயிரம் ரூபாய் சன்மானமும் வழங்கப்பட்டது.
கோவை: கோவையில் உள்ள சேன்ஞ் டிரஸ்ட் நிறுவனர் திருநங்கை தஸ்லீமா நஸ்ரினுக்கு கோவை கிளப் ரோட்டரி மேட்ரோ பாலிஸ் சார்பாக 'ரியல் ஹிரோஸ்' விருதும் 50 ஆயிரம் ரூபாய் சன்மானமும் வழங்கப்பட்டது.
கேரளா மாநிலம் திருச்சூரில் கடந்த சனிக்கிழமை அன்று நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் இந்தியா முழுவதிலும் இருந்து 54 நபர்கள் பரிசீலிக்கப்பட்டு இறுதியாக நான்கு பேர் தேர்வு செய்யப்பட்டனர். இதில், தமிழகத்தின் சார்பாக கோவையை சேர்ந்த திருநங்கை தஸ்லீமா நஸ்ரினுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

திருநங்கையான தஸ்லிமா நஸ்ரின் 14 வயதில் வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டவர். தன்னுடைய 18-வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது, மருத்துவமனையின் சுற்றுச்சூழல் மற்றும் சுத்தம், போதிய வசதிகள் போன்றவை இல்லாததைக் கண்டு அதனை சரிசெய்ய வேண்டும் என எண்ணியுள்ளார்.

இதற்காகப் பல முயற்சிகளை மேற்கொண்ட அவர், 2011-ம் ஆண்டில் இருந்து சமூக ஆர்வலராக பல சமுதாய பணிகளில் ஈடுபட தொடங்கினார். 2013-ம் ஆண்டு சேன்ஞ் டிரஸ்ட்டை தொடங்கினார். கடந்த 3 ஆண்டுகளாக கோவை மருத்துவமனைக்கு தேவையான அத்தனை உதவிகளையும் செய்து வருகிறார். இதுவரை 150-க்கும் மேற்பட்ட படுக்கைகள், 500-க்கும் மேற்பட்ட போர்வைகள், 100க்கும் மேற்பட்ட கழிவரை கதவுகள், பல நூறு தலையணைகள் போன்றவை சேன்ஞ் டிரஸ்டின் மூலம் அரசு மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளது.

மேலும், கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து 15 ஆயிரம் மாணவர்களை கடந்த நான்கு ஆண்டுகளில் ரத்த தானம் செய்ய வைத்துள்ளார். கோவை அரசு மருத்துவமனைக்கு வரும் ஆதரவற்ற நோயாளிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார். அதே சமயம் மருத்துவமனையை சுற்றிலும் தூய்மை பணியில் ஈடுபட்டு வருகிறார். 60-க்கும் மேற்பட்ட மரங்களை நட்டு அதனையும் மாணவர்களின் உதவியோடு பாரமரித்து வருகிறார். அரசு மருத்துவமனையில் தண்ணீர் பற்றாக்குறையை சாமளிக்க 2 ஆழ்துளைக் கிணறுகளையும் அமைத்து தந்துள்ளார்.
இவரது இந்த சேவைகளை பாராட்டி கோவை மாவட்டத்தின் தூய்மை இந்தியா திட்டத்தின் ஒருங்கிணைப்பாளராகக் கோவை மாநகராட்சி இவரை நியமித்துள்ளது. கல்வி பணிகளிலும் ஈடுபட்டுள்ள தஸ்லீமா மாநகராட்சி பள்ளிக்கூடங்களில் படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகம், பேனா மற்றும் இரண்டு பள்ளிகளில் நூலகமும் அமைத்து தந்துள்ளார்.

தற்போது இவரது சேவையை பாராட்டி கோவை கிளப் ரோட்டரி மேட்ரோ பாலிஸ் சார்பாக இந்தாண்டுக்கான 'ரியல் ஹிரோஸ்' விருது வழங்கப்பட்டுள்ளது.
இது குறித்து தஸ்லீமா கூறுகையில், "நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால், இறப்பு ஒரு சரித்திரமாக இருக்க வேண்டும் என முன்னாள் குடியரசு தலைவர், விஞ்ஞானி அப்துல்கலாம் தெரிவித்துள்ளார் அதனை பின்பற்றி நான் வாழ்ந்து வருகிறேன். நான் ஒரு திருநங்கையாக கோவை அரசு மருத்துமனையில் சிகிச்சைக்காக வந்த போது பெற்ற கஷ்டங்களை இனி யாரும் படக்கூடாது என நினைத்தேன். மருத்துவம் மற்றும் கல்வி இந்த சமுதாயத்தில் அனைவருக்கும் சமமாக கிடைக்க வேண்டும்.
சேன்ஞ் டிரஸ்டின் மூலம் பல அமைப்புகளின் உதவிகளோடு இதனை செய்து வருகிறேன். இந்தத் தருணத்தில் எனக்கு உதவிய சமூக ஆர்வலர் அஞ்சலி அஜய், கோவை கிளப் ரோட்டரி மேட்ரோ பாலிஸ் தலைவர் தருண் ஷா, ரோட்டாரியின் துணை ஆளுநர் மணிவண்ணன் போன்றோருக்கு நன்றி சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன். கல்வி மற்றும் மருத்துவம் தொடர்பாக என்னை யார் வேண்டுமானும் தொடர்பு கொள்ளலாம் (9787345432)", என்றார்.