தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் பெண்கள் இருவர் பலி

திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் இரண்டு பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

சத்தியமங்கலம் பகுதியில் இருந்து தாராபுரம் நோக்கி தனியாருக்குச் சொந்தமான பயணிகள் பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து திருப்பூர் மாவட்டம் கொடுவாய் அருகே வந்த போது ஒட்டன்சத்திரத்திலிருந்து திருப்பூர் நோக்கி வந்து  கொண்டிருந்த  தனியார் பேருந்துடன் நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியாகினர். மேலும் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.



இது தொடர்பாக, அப்பகுதி மக்கள் ஊதியூர் போலீசாருக்கு தகவல் அளித்தனர். தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.



தனியார் பேருந்துகள் இரண்டும் அதி வேகமாக பயணித்ததே இந்த விபத்திற்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இதனிடையே விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் பேருந்து ஓட்டுநர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.



Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...