கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இன்று குனியமுத்தூர் பகுதியில் உள்ள வாய்க்காலில் கள ஆய்வு மற்றும் களப்பணியில் ஈடுபட்டனர்.
கோவை : கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் இன்று குனியமுத்தூர் பகுதியில் உள்ள வாய்க்காலில் கள ஆய்வு மற்றும் களப்பணியில் ஈடுபட்டனர்.

கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பினர் வெள்ளலூர் குளக்கரையில் கடந்த 11-ம் தேதி இரண்டாவது வாரமாக மியாவாக்கி முறையில் மரங்களை நடவு செய்யும் பணியினை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து அந்த பகுதிக்கு சென்ற தன்னார்வலர்கள் இன்று அவற்றை பராமரிக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் குனியமுத்தூர் பகுதியில் உள்ள வாய்க்கால் பகுதிக்கு சென்ற 40-க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள் கள ஆய்வு மற்றும் களப்பணியில் ஈடுபட்டனர்.

நிகழ்வில், தமிழர்கள் கையாண்ட நீர் பங்கீடு குறித்த விபரங்கள் அடங்கிய பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் வடக்கு பிரகாரத்தில் காணப்படும் கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு குறித்தும் அதில் கூறப்பட்டுள்ள தேவி சிறை அணைக்கட்டு என்னும் கோயம்புத்தூர் அணைக்கட்டு குறித்தும் கல்வெட்டு ஆய்வாளர் ஜெகதீசன் தன்னார்வலர்களுக்கு விளக்கமளித்தார்.