ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் குறித்து சீமா உறுப்பினர்கள் ஆலோசனை

ஸ்டார்ட அப் இந்தியா திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான வரைவு கொள்கைகள் வகுப்பது குறித்து தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் (சீமா) ஆலோசனை நடத்தினர்.

கோவை: ஸ்டார்ட அப் இந்தியா திட்டத்தை தமிழகத்தில் செயல்படுத்துவதற்கான வரைவு கொள்கைகள் வகுப்பது குறித்து தென்னிந்திய பொறியியல் உற்பத்தியாளர்கள் சங்கத்தினர் (சீமா) ஆலோசனை நடத்தினர்.

பாரத பிரதமர் மோடி அறிவித்த ஸ்டார்ட் அப் இந்தியா திட்டத்தின் முக்கிய நோக்கம், தொழில் தொடங்க தடையாக உள்ள பல்வேறு சட்ட திட்டங்களை எளிமைப்படுத்துவது மற்றும் தொழில் தொடங்க ஆதரவான சூழல் உருவாக்குதல், நிதியுதவி மற்றும் ஊக்கத்தொகை வழங்குதல், கல்வி நிலையங்கள், தொழில்நிறுவனங்களோடு கூடிய ஒத்துழைப்பிற்கு மற்றும் தொழில்காப்பதிற்கு ஊக்கமளித்தல் போன்றவையாகும்.

பல்வேறு மாநிலங்களின் வேறுபட்ட தொழில் கொள்கைகளின் காரணமாக, பல தொழில்நிறுவனங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் மற்றும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை இணைந்து நாடு முழுவதும் 75 தொழில் காப்பகங்களை  என்.ஐ.டி., ஐ.ஐ.ஐ.டி., மற்றும் ஐ.ஐ.எஸ்.சி.  உடன் இணைந்து அமைக்க முடிவெடுத்துள்ளது. 

இந்த நிலையில், இந்த ஸ்டார்ட் அப் திட்டத்தினை தமிழகத்தில் செயல்படுத்த வரைவு கொள்கைகள் வகுப்பது குறித்து சீமாவில் கூடுதல் இயக்குநர் சஜீனா தலைமையில் நேற்று கலந்துரையாடல் நடைபெற்றது. அப்போது, ஸ்டார்ட் அப் திட்டத்தின் மூலம் தொழில் நிறுவனங்களுக்கும் தேவையான அனைத்து உதவிகளும் சீமா வழங்கும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், அனைத்து கருத்துக்களையும் ஒன்றிணைத்து, ஒரு வரைவு திட்டத்தினை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அனுப்பி, அதற்கான ஒப்புதல் பெற்றபின் அரசிற்கு சமர்ப்பிக்க முடிவு எடுக்கப்பட்டது. 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...