நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையை மறுசீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையை மறுசீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பல ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்டிருந்த சில கண்ணாடி மாளிகைகள் உள்ளன. அதில், பலவகையான தாவரச்செடிகள் வளர்க்கப்பட்டு வருகின்றன. தாவரவியல் பூங்காவில் பிரதான பகுதியில் உள்ள கண்ணாடி மாளிகையில் கண்ணாடிகள் உடைந்து, கட்டுமானம் பழுதடைந்து இருந்தமையால் சுற்றுலாப் பயணிகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இதனால், அதில் வைக்கப்பட்டிருந்த செடி மற்றும் தாவர வகைகளை சுற்றுலாப் பயணிகள் காண முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.

இந்த நிலையில், தாவரவியல் பூங்காவை மேம்படுத்த மாநில அரசின் சார்பில் ரூ. 5.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தற்போது சீரமைப்பு பணிகள் தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக பூங்காவில் உள்ள கண்ணாடி மாளிகையை மறுசீரமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தப் பணிகள் எதிர்வரும் பிரதான சீசனுக்கு முன்பு நிறைவுபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.