உதகை - குன்னூர் சாலையில் எச்சரிக்கை பலகை மற்றும் தடுப்புச்சுவர்கள் அமைக்கக் கோரிக்கை

நீலகிரி மாவட்டம் உதகை - குன்னூர் சாலையில் தொடரும் விபத்துகளை தடுக்கும் வகையில், எச்சரிக்கை பலகை மற்றும் தடுப்பு சுவர்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் உதகை - குன்னூர் சாலையில் தொடரும் விபத்துகளை தடுக்கும் வகையில், எச்சரிக்கை பலகை மற்றும் தடுப்பு சுவர்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



நீலகிரி மாவட்டத்தின் பெரும்பாலான சாலைகள் மலைப்பகுதிகள் மற்றும் சரிவு பகுதிகளில் அமைந்துள்ளது. இதேபோல, உதகை - குன்னூர் சாலை கேத்தி பள்ளத்தாக்கை ஒட்டிய சரிவு பகுதிகளில் அமைந்துள்ளது. உதகை நகருக்கு செல்லக்கூடிய முக்கிய சாலையாக இது அமைந்திருப்பதால், நாள்தோறும் ஏராளமான சுற்றுலா வாகனங்கள் செல்கின்றன. இந்த சாலையில் முறையான தடுப்பு சுவர்கள் மற்றும் பள்ளத்தாக்கு குறித்த எச்சரிக்கை பதாகைகள் எதுவும் அமைக்கப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதிகளில் நாளுக்கு நாள் விபத்து எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பல உயிரிழப்புகளும் ஏற்படுகின்றன. எனவே, இதனைக் கருத்தில் கொண்டு விபத்துகளை தடுக்கும் வகையில், எச்சரிக்கை பதாகைகள் மற்றும் சாலை ஓரங்களில் முறையான தடுப்பு சுவர்கள் அமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்தினருக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...