ஜெ., பிறந்த நாளையொட்டி அன்னதானம் நிகழ்ச்சியைத் தொடங்கி வைத்த முதலமைச்சர்

ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அன்னதான நிகழ்ச்சியை, உணவுகளைப் பரிமாறி முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

மேட்டுபாளையம்: ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் அன்னதான நிகழ்ச்சியை, உணவுகளைப் பரிமாறி முதலமைச்சர் எடப்பாடி கே. பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

நீலகிரி மாவட்டம் குன்னூரில் உள்ள முத்தலாம்மன் கோவில் கும்பாபிஷேக விழாவில் பங்கேற்பதற்காக சென்னையில் இருந்து விமானம் மூலம் கோவை வந்தார். பின்னர், குன்னூரில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற பின்னர், அவர் கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்திற்கு வருகை புரிந்தார். கோவை அ.தி.மு.க., அம்மா பேரவை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளை முன்னிட்டு 10,000 பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். அங்கு குழுமியிருந்த கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வரவேற்பை ஏற்றுக்கொண்ட முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பொதுமக்களுக்கு உணவுகளைப் பரிமாறி அன்னதானத்தை தொடங்கிவைத்தார்.

அவருடன் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி மற்றும் கோவை, நீலகிரி மாவட்ட எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் கலந்துகொண்டனர். மேட்டுப்பாளையம் பேருந்து நிலையம் வளாகத்தில் நடைபெற்ற இந்த அன்னதான நிகழ்ச்சியில் முதலமைச்சர் பங்கேற்ற காரணத்தால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. நிகழ்ச்சியை முடித்து விட்டு முதலமைச்சர் பழனிச்சாமி தனது சொந்த ஊரான எடப்பாடிக்கு புறப்பட்டுச் சென்றார்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...