மகளை மீட்டுத் தாருங்கள்..! : பெற்றோர் கண்ணீர் புகார்


திருப்பூர் : திருமணம் செய்து கொண்டு வங்கதேசத்தில் வசிக்கும் தனது மகளை மீட்டுத் தருமாறு அந்த பெண்ணின் பெற்றோர் திருப்பூர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். 

திருப்பூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தை சேர்ந்தவர் உலகநாதன் இவரது மனைவி செல்வ கோமதி. இவர்களுக்கு பூா்ணா தேவி (19) என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன் ரிமுஷேக் என்ற வாலிபரை திருமணம் செய்து கொண்டு வங்கதேசம் சென்றதாகக் கூறப்படுகிறது. 

இந்த நிலையில், மகள் தங்களிடம் பேசுவதில்லை என்று கூறியும், அவரை மீட்டுத்தர் வேண்டியும் உலகநாதன்-செல்வ கோமதி தம்பதியினர் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளனர். 

அதில், " எங்கள் மகளான பூா்ணாதேவி கடந்த 2016-ம் ஆண்டு ரிமுஷேக் என்கிற இஸ்லாமியருடன் காதல் ஏற்பட்டு, இருவரும் திருமணம் செய்து கொண்டு வங்கதேசத்தில் வசித்து வந்தனர்.  திருமணம்  முடிந்த பின்னும் வாரந்தோறும் பூா்ணாதேவி எங்களுடன் பேசி வந்தார். இந்த நிலையில், கடந்த எங்களைத் தொடர்பு கொண்ட ரிமுஷேக் பூா்ணாதேவி உடல்நிலை சரியில்லாத காரணமாக இறந்து விட்டதாக கூறினார். இந்நிலையில், ரிமுஷேக்கை பற்றி விசாரித்தபோது லவ்ஜிகாத் அமைப்பைச் சேர்ந்தவர் என்பது தெரியவந்துள்ளது. எனது மகளை தவறான நோக்கத்துடன் கடத்தி சென்று தீவிரவாத செயலுக்காக  பயன்படுத்தப்பட்டுள்ளதாக சந்தேகம் ஏற்பட்டுள்ளது. எங்கள் மகளின் தற்போதைய நிலையை அறிந்து, எங்களிடம் மீட்டுத் தர வேண்டும்" இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...