பல்லடத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 10 வயது சிறுமி பலியான சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர்: பல்லடத்தில் டெங்கு காய்ச்சலுக்கு 10 வயது சிறுமி பலியான சம்பவம் பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
பல்லடம் அருகே சந்தமநாயக்கன் பாளையத்தை சேர்ந்த கூலித் தொழிலாளி சங்கர். இவரது மனைவி பாண்டியம்மாள். இவர்களுக்கு ஹரி என்ற மகனும், தாமரைச்செல்வி என்ற மகளும் உள்ளார். தாமரைச்செல்வி அப்பகுதியிலுள்ள அரசு பள்ளியில் ஆறாம் வகுப்பு படித்து வந்தார்.
கடந்த 10 நாட்களுக்கு முன்பாக தாமரைச்செல்விக்கு காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து அவர் பல்லடத்திலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு தாமரைச்செல்வியின் ரத்த மாதிரிகளை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு டெங்கு காய்ச்சல் இருப்பதை உறுதி செய்தனர்.
இதையடுத்து மேல் சிகிச்சைக்காக அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று மாலை சிகிச்சை பலனின்றி தாமரைச்செல்வி உயிரிழந்தார்.
தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் சற்றே ஓய்ந்த நிலையில், தற்போது மீண்டும் ஒரு சிறுமி டெங்குவால் உயிரிழந்த சம்பவம் பொதுமக்களை பீதியடையச் செய்துள்ளது.