பராமரிக்கப்பட்ட உதகை மரவியல் பூங்கா தொடர்பாக முறையான விழிப்புணர்வு இல்லாததால், அதனை சுற்றுலா பயணிகள் கண்டுகொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது.
உதகை : பராமரிக்கப்பட்ட உதகை மரவியல் பூங்கா தொடர்பாக முறையான விழிப்புணர்வு இல்லாததால், அதனை சுற்றுலா பயணிகள் கண்டுகொள்ளாத நிலை ஏற்பட்டுள்ளது.

சுற்றுலா நகரம் என்றழைக்கப்படும் உதகையில் பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. குறிப்பாக, அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்கள் உள்ளன. தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பூங்காக்களில் மலர்களைக் காணவே அதிகமான சுற்றுலா பயணிகள் வருகை புரிகின்றனர். இவ்வாறு வரும் சுற்றுலா பயணிகளுக்கு ஒரு மாறுதல் ஏற்படுத்தும் வகையில், படகு இல்ல மறுகரையில் தோட்டக்கலைத்துறை கட்டுப்பாட்டில் கடந்த 1982-ம் ஆண்டு பல்வேறு வகையான குளிர்பிரதேசங்களில் இருந்து 60 வகையான அரிய மரக்கன்றுகளை நடவு செய்யப்பட்டது. காலப்போக்கில் போதிய வேலிகள் இல்லாததால் பராமரிக்கப்படாமல் இருந்தது.

இதனையடுத்து, மீண்டும் இப்பூங்காவை பொலிவுபடுத்தும் வகையில், கடந்த 2007-ம் ஆண்டு சிறப்பு மேம்பாட்டு திட்ட நிதியின் கீழ் சுமார் 14 லட்சம் செலவில் புதுப்பிக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகிறது. இப்பூங்கா அழகான, அமைதியான, சுற்றுச்சூழல் சிறிதும் மாசுபடாமல் இருந்து வருகிறது. எனவே, உதகைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் பார்வைக்கு தெரியப்படுத்தும் வகையில் விளம்பரங்களைச் செய்தால் இப்பூங்காவின் அழகு அனைவராலும் ஆதரிக்கப்படும் என்பது சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.