உதகையில் பல்நோக்கு மருத்துவமனை அமையுமா? : எதிர்பார்ப்பில் பொதுமக்கள்

நீலகிரியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் அம்மாவட்ட மக்கள் சொல்லிலடங்கா துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

நீலகிரி: நீலகிரியில் செயல்பட்டு வரும் அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பற்றாக்குறையால் அம்மாவட்ட மக்கள் சொல்லிலடங்கா துயரத்திற்கு ஆளாகி வருகின்றனர். 

நீலகிரி 

சுற்றுலாவுக்குப் பெயர் பெற்ற நீலகிரி மாவட்டத்தில் சுமார் 7.5 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். அம்மக்களுக்காக உதகை, குன்னூர், குந்தா, கூடலூர், பந்தலூர் ஆகிய 5 தாலூக்காவுக்கு உட்பட்ட பகுதிகளில் அரசு மருத்துவமனைகள் செயல்பட்டு வருகிறது. 



உதகையில் உள்ள அரசு மருத்துவமனை மாவட்டத்தின் மற்ற அனைத்து அரசு மருத்துவமனைகளுக்கு தலைமை மருத்துவமனையாகச் செயல்பட்டு வருகிறது. அங்கு சி.டி.ஸ்கேன், எம்.ஆர்.ஐ ஸ்கேன் உள்ளிட்ட தொழில் நுட்ப கருவிகளைப் பயன்படுத்தி சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.



இந்நிலையில், அங்கு போதிய மருத்துவர்கள், அறுவை சிகிச்சை நிபுணர்கள், எலும்பு முறிவு மருத்துவர்கள் போன்ற மருத்துவர்கள் இல்லாததாலும், ஊழியர்கள் பற்றாக்குறையாலும் அவசர சிகிச்சைக்காக வரும் மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகின்றனர். அதோடு, மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையை பரிந்துரைக்கும் போது சுமார் 40 கி.மீ தூரத்திற்கு கொண்டை ஊசி வளைவுகள் அதிகம் கொண்ட மலைப்பாதை வழியாக சென்று, 100 கி.மீ தொலைவை கடந்து கோவைக்கு செல்வதற்குள் பலர் உயிரிழந்து விடுகின்றனர்.  



மகப்பேறு மருத்துவம் 

உதகை நகரின் மத்தியில் பெண்களுக்கான மகப்பேறு மருத்துவமனை அமைந்துள்ளது. இந்த மருத்துவமனையில் நாள்தோறும் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சிகிச்சை பெற்று செல்கின்றனர். அங்கு மருத்துவர்கள் இல்லாததால் 2 அல்லது 3 நாட்களுக்கு ஒரு முறை சமவெளி பிரதேசங்களில் இருந்து மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளிக்கும் அவலம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவ ஊழியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர். 



மருத்துவர்கள் பற்றாக்குறை இருப்பதால் 10 முதல் 15 பேர் வரை உயர் சிகிச்சைக்காக சமவெளி பிரதேசங்களுக்கு பரிந்துரை செய்யப்படுகின்றனர். அவ்வாறு அவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அழைத்து செல்லும் போது பாதி வழியிலேயே பிரசவித்து விடுவதாகவும் ஒரு சிலர் உயிரிழந்து விடுவதாகவும் ஆம்புலன்ஸ் ஒட்டுநர்கள் வருத்தம் தெரிவிக்கின்றனர். 

கோத்தகிரி 

கூடலூர், குன்னூர் மற்றும் கோத்தகிரி அரசு மனைகளிலும் இதே நிலை தான் நிலவி வருகிறது. கோத்தகிரியில் மருத்துவமனையைச் சுற்றியும் புதர்கள் மண்டி கிடப்பதால் இங்கு உலா வரும் கரடி, சிறுத்தை போன்ற வனவிலங்குகளால் ஆபத்து ஏற்படும் நிலை உருவாகியுள்ளது. மேலும், ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தும் போதிய பராமரிப்பின்றியும் அவல நிலையில் காணப்படுகிறது இம்மருத்துவமனை. 



கூடலூர் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவர்களே இல்லை என்பதால் இங்கு வரும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவதோடு, மேல் சிகிச்சைக்காக கூடலூரில் இருந்து சுமார் 135 கி.மீ தூரத்தில் உள்ள அண்டை மாநிலமான கேரளா பகுதியில் உள்ள கள்ளிக்கோட்டை தனியார் மருத்துவமனைக்கும், 42 கி.மீ தூரத்தில் உள்ள சுல்தான் பத்தேரி மற்றும் 130 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மலப்புரம் அரசு மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றனர். 

"எனவே சுற்றுலா மாவட்டமாக திகழ்ந்து வரும் நீலகிரி மாவட்டத்தில் சுற்றுலாவிற்கு மட்டும் தனி கவனம் செலுத்தும் தமிழக அரசு கடந்த 2011-ம் ஆண்டு தேர்தல் வாக்குறுதியாக உதகை தலைமை மருத்துவமனையை அதி நவீன மருத்துவமனையாக மாற்றி பொது மக்களுக்காக உயர் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனையாக மாற்றப்படும் என உறுதியை செயல்படுத்த வேண்டும்" என்று உதகை மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...