பாரதியார் பலகலைக் கழகத்தில் துணை வேந்தர் செய்த ஊழலால் பாதிக்கப்பட்டவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.
கோவை: பாரதியார் பலகலைக் கழகத்தில் துணை வேந்தர் செய்த ஊழலால் பாதிக்கப்பட்டவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் தனித்தனியாக விசாரணை மேற்கொண்டனர்.
சரியான தகுதிகள் இருந்தும் தங்களுக்கு பாரதியார் பல்கலைக்கழகத்தில் பணிகள் ஒதுக்கவில்லை என பணியிடைநீக்கம் செய்யப்பட்ட துணைவேந்தர் கணபதி மீது ஒரு வருடத்திற்கும் முன்பாகவே 15 க்கும் மேற்பட்டோர் புகார் அளித்திருந்தனர்.

இந்த நிலையில், கணபதி கடந்த வாரம் சனிக்கிழமை கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக, கடந்த திங்கட்கிழமை அன்று மீண்டும் அந்த 15 பேர் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர்.
கணபதி-யால் முறைகேடான முறையில் பணியில் அமர்த்தப்பட்டவர்களை நீக்கம் செய்துவிட்டு முழுத்தகுதி உள்ள தங்களுக்கு அந்த பணிகளை ஒதுக்குமாறும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
புகார் செய்திருந்த 15 பேரில் முதற்கட்டமாக 5 பேரிடம் நேற்று மாலை 7 மணி முதல் 8 மணி வரை லஞ்ச ஒழிப்பு துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். எந்த வகையில் கணபதியால் பாதிக்கப்பட்டீர்கள்? என்பது குறித்த போன்ற விசாரணைகள் தங்களிடம் மேற்கொள்ளப்பட்டதாக அருள்மீனா என்பவர் கூறினார்.