மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் இன்னிசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் அரங்கேறும் 3 நாள் யக்ஷா திருவிழாவை சத்குரு இன்று தொடங்கி வைத்தார்.
கோவை : மஹாசிவராத்திரி விழாவை முன்னிட்டு ஈஷா யோகா மையத்தில் இன்னிசை மற்றும் நாட்டிய நிகழ்ச்சிகள் அரங்கேறும் 3 நாள் யக்ஷா திருவிழாவை சத்குரு இன்று தொடங்கி வைத்தார்.

9-ம் ஆண்டு யக்ஷா விழாவின் முதல் நாளான இன்று ராகேஷ் சௌராசியாவின் மனதை வருடும் புல்லாங்குழல் இசை நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சியில் சத்யஜித்தல் வாக்கர் தபேலா இசைத்தார். ராகேஷ் சௌராசியா புகழ்பெற்ற பண்டிட் ஹரிப்ரசாத் சௌராசியாவின் சீடர் ஆவார்.
நிகழ்ச்சியின் நிறைவில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. தினமும் மாலை 6:30 மணி முதல் 8:30 மணி வரை நடக்கவிருக்கும் யக்ஷாநிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொள்ளலாம். நாளை ஸ்ருதி சடோலிகரின் வாய்ப்பாட்டு நிகழ்ச்சியும், நாளை மறுதினம் வித்வான் என். ரவிக்கிரனின் சித்ரவீனா நிகழ்ச்சியும் நடைபெறஉள்ளது.