நடிகர் ரஜினியின் காலா திரைப்படம் ஏப்., 27-ம் தேதி ரிலீஸ்

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ரசிகர்களின் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள காலா திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வொண்டர்பார் பிலிம்ஸ் சார்பில் தயாராகியுள்ள திரைப்படம் காலா. இந்த படத்தில் ஹுமா குரேஷி, நானா படேகர், அஞ்சலி பாட்டீல், சமுத்திர கனி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். சிறுவயதில் திருநெல்வேலியில் இருந்து மும்பைக்கு தப்பி செல்லும் ரஜினிகாந்த், அங்கு சக்தி வாய்ந்த டானாக தாராவியில் வாழ்ந்து வருகிறார். அவரை எதிர்ப்பவர்களுக்கு காலாவாக அவர் இருக்கிறார்.

வொண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் நடிகர் தனுஷ் தயாரிப்பில், பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயண் இசையமைத்து உள்ளார். இந்த நிலையில், காலா படத்தின் வெளியீடு தேதி இன்றிரவு 7 மணிக்கு அறிவிக்கப்படும் என நடிகர் தனுஷ் தனது டுவிட்டரில் தெரிவித்திருந்தார். அதன்படி, காலா திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி உலகமெங்கும் திரைக்கு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, ரஜினியின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு பிறகு வெளியாகவிருக்கும் முதல்படம் என்பதால், காலா திரைப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Newsletter

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் "தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள்" குறித்த செய்முறைப் பயிற்சி

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 19-22, 2026 வரை தாவரத் திசு வளர்ப்பு நுட்பங்கள் குறித்த ச...