கூடலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தும் பணி தொடக்கம்

நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தொடங்க இருப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் பணிகள் தொடங்க இருப்பதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

கூடலூர் தாலுகாவுக்கு உட்பட்டது ஓவேலி பேரூராட்சி. இங்குள்ள 18 வார்டுகளில் 48 சிறிய கிராமங்கள் உள்ளன. அந்த கிராமங்களில் 24,793 பேர் வசித்து வருகின்றனர். இதில் 60 சதவிகிதம் தாழ்த்தப்பட்ட வகுப்பினரும், 35 சதவிகிதம் பிற வகுப்பினரும், 5 சதவிகிதம் பழங்குடியினரும் வசித்து வரும் இந்தக் கிராமங்களில் அடிப்படை வசதிகள் முறையாக இல்லை என்று குற்றச்சாட்டு எழுந்தது.

இப்பேரூராட்சி செக்ஷன் - 17 நிலத்தில் உள்ளதால், அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவதில் சிக்கல் ஏற்பட்டது. கட்டுமானப் பணிகள் மேற்கொள்ள வனத்துறையும் எதிர்ப்பு தெரிவித்தது. குறிப்பாக, 2006-ம் ஆண்டுக்குப் பின்னர், இப்பேரூராட்சியில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படாததால், பொதுமக்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகி இருந்தனர்.

இந்நிலையில், ‘அடிப்படை வசதிகள் மக்களின் உரிமை’ என்று உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல் கொடுத்ததால் சாலை, நடைபாதை, குடிநீர், மின்சாரம், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்ற டெண்டர் கோரப்பட்டு பணிகள் தொடங்கியுள்ளன.

ரூ.4.5 கோடி ஒதுக்கீடு

ஓவேலி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் சாலை, குடிநீர், நடைபாதை, தெரு விளக்கு மற்றும் குடியிருப்புகளுக்கு மின்சாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்பட உள்ளன. இதற்கான டெண்டர் நேற்று நடந்தது.

இது தொடர்பாக, பேரூராட்சி செயல் அலுவலர் எம்.என்.வேணுகோபால் கூறுகையில், "ஓவேலி பேரூராட்சியில் 2006-ம் ஆண்டுக்குப் பின்னர் அடிப்படை வசதிகள் நிறைவேற்ற டெண்டர் கோரப்பட்டது. இப்பணிகளுக்கான உத்தரவு, வரும் 16-ம் தேதி வழங்கப்படும். அன்று முதல் அடிப்படை வசதிகளுக்கான கட்டுமானப் பணிகள் தொடங்கும். இதற்காக ரூ.4.5 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது" என்றார்.

இதுதொடர்பாக அப்பகுதி மக்கள் கூறுகையில், "நடைபாதை, தெரு விளக்கு இல்லாமல் வன விலங்குகள் நடமாட்டத்தால் சிரமப்பட்டு வந்தோம். தற்போது, எங்கள் பகுதிக்கு அடிப்படை வசதி நிறைவேற்றப்பட உள்ளதால், விடிவு பிறந்துள்ளது" என்றனர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...