காவல்துறையினரின் குடியிருப்பில் தீவிபத்து

திருப்பூர் மாநகர காவல்துறையினர் குடியிருப்பில் எரிவாயு சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர்: திருப்பூர் மாநகர காவல்துறையினர் குடியிருப்பில் எரிவாயு சிலிண்டர் கசிவால் ஏற்பட்ட தீ விபத்தால் பரபரப்பு ஏற்பட்டது.



திருப்பூர் மாநகர காவல்துறையினருக்கான குடியிருப்பு வாவிபாளையம் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு திருப்பூர் தெற்கு காவல்நிலையத்தில் காவலராகப் பணிபுரிந்து வரும் ராஜசேகர் என்பவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் டி பிளாக்கில் 11- வது குடியிருப்பில் வசித்து வருகிறார்.



இந்த நிலையில், நேற்று மாலை கேஸ் அடுப்பில் ராஜசேகரின் மனைவி சமையல் செய்துகொண்டிருந்த போது அவரது குழந்தை கேஸ் டியூப்பை இழுத்துவிட்டதால் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக ராஜசேகரின் மனைவி குழந்தையை அழைத்துக்கொண்டு கீழே வந்து தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்ததையடுத்து தீ அணைக்கப்பட்டது.



மாநகர காவலர் குடியிருப்பில் கேஸ் கசிவினால் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...