நீலகிரி மாவட்டத்தில் தனியார் எஸ்டேட்டில் மர்மமான முறையில் குட்டி யானை உயிரிழந்து கிடந்தது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நீலகிரி : நீலகிரி மாவட்டத்தில் தனியார் எஸ்டேட்டில் மர்மமான முறையில் குட்டி யானை உயிரிழந்து கிடந்தது. இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

குன்னூர் சரகம் வண்டிசோலை பிரிவு லேம்ஸ்ராக் காவல்பகுதிக்கு உட்பட்ட சிங்காரா தனியார் தேயிலை தோட்டத்துக்கு சொந்தமான கீழ் சிங்காரா தேயிலை தோட்டத்தில் ஆண் யானை குட்டி ஒன்று இறந்து கிடந்தது நேற்று கண்டறியப்பட்டது. மாவட்ட வனஅலுவலர் உத்தரவு படி, வனச்சரகர் பெரியசாமி தலைமையில், ஜெகதளா கால்நடை மருத்துவரால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர், குட்டி யானையின் உடல் உறுப்புகளின் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுகாக அனுப்பபட்டது.
வனஊழியர்கள் கூறும் போது, ‘இறந்த ஆண் குட்டி பிறந்து ஓரிரு மாதங்கள் இருக்கும். எதனால் இறந்தது என்பது குறித்து அதன் உடல் உறுப்புகளின் மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்ட பின்னரே தெரிய வரும்’ என்றனர்.