கிணற்றில் தவறி விழுந்து இரவு முழுவதும் தவித்த முருக பக்தர் : 12 மணி நேரத்திற்குப் பிறகு உயிருடன் மீட்பு

கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் சிஜீ. முருக பக்தரான இவர் பழனிக்கு பாதயாத்திரையாகச் சென்றார். பழனியை அடைந்த சிஜீ, அங்கிருந்து பேருந்து மூலம் தனது நண்பரைக் காண நேற்று திருப்பூர் வந்தார்.

திருப்பூர் : கேரள மாநிலம் கொல்லம் பகுதியைச் சேர்ந்தவர் சிஜீ. முருக பக்தரான இவர் பழனிக்கு பாதயாத்திரையாகச் சென்றார். பழனியை அடைந்த சிஜீ, அங்கிருந்து பேருந்து மூலம் தனது நண்பரைக் காண நேற்று திருப்பூர் வந்தார். 



தூக்கக் கலக்கத்தில் திருப்பூர் என நினைத்து அவிநாசிபாளையம் பகுதியில் இறங்கிய அவர் வழி தெரியாத காரணத்தால் சாலையோரமாக நடந்து சென்று கொண்டிருந்தார். இரவு நேரம் என்பதால் சாலையோரம் கிணறு இருந்தது தெரியாமல் கிணற்றுக்குள் தவறி விழுந்தார். 

60 அடி ஆழக் கிணறு என்பதாலும், இரவு நேரம் என்பதாலும் அவர் எழுப்பிய குரல் யாருக்கும் கேட்கவில்லை. இரவு முழுவதும் கிணற்றிலேயே இருந்துள்ளார். 

இன்று காலை அப்பகுதி வந்தவர்கள் அவரது குரலை கேட்டு, அவிநாசிபாளையம் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர். தகவல் அறிந்து அப்பகுதிக்கு வந்த பல்லடம் தீயணைப்பு துறையினர் கயிரை கட்டி இன்று காலை 12 மணியளவில் அவரை மீட்டு திருப்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

கிணற்றில் விழுந்து 12 மணி நேரத்திற்குப் பிறகு மீட்கப்பட்ட சிஜீக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. 

Newsletter

அவிநாசி தனித்தொகுதி தவெக MLA கமலி அமைச்சராக பதவியேற்பு

திருப்பூர் மாவட்டம் அவிநாசி தனித்தொகுதி தமிழக வெற்றிக் கழக MLA கமலி, தவெக அரசின் இரண்டாம் கட்ட அமைச்சரவை விரிவாக்கத்தில்...

கோவை மாவட்டத்தை சேர்ந்த 2 தவெக MLA-க்களுக்கு அமைச்சரவை பதவி..!

கோவை வடக்கு மற்றும் கிணத்துக்கடவு தொகுதிகளை சேர்ந்த தவெக சட்டமன்ற உறுப்பினர்கள் சம்பத்குமார், விக்னேஷ் குமார் ஆகியோருக்க...

கோவையில் இன்று (21.05.2026) மாதாந்திர மின் பராமரிப்பு:  பல பகுதிகளில் மின் நிறுத்தம்

கோவை நகரில் மே 21, 2026 காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஐந்து துணை மின்நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும...

Left Parties Stage Demonstration in Coimbatore Urging Rollback of Fuel and Commercial LPG Price Hike..!

Demanding an immediate rollback of the hike in petrol, diesel and commercial LPG cylinder prices, the CPI(M), CPI and CP...

பெட்ரோல், டீசல், சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற கோரி கோவையில் இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்..!

பெட்ரோல், டீசல் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான எரிவாயு சிலிண்டர் விலை உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தி, கோவையில் மார்க்சிஸ...

புதிய தமிழக அரசுக்கு வாழ்த்து தெரிவித்த கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள் சங்கம்..!

புதியதாக பொறுப்பேற்றுள்ள தமிழக முதல்வர் ஜோசப் விஜய் தலைமையிலான அரசுக்கு கோவை மண்டல திருக்கோவில்கள் பரம்பரை அறங்காவலர்கள்...