கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்த சிறுவனை, மருத்துவர் தாக்கியதாக பெற்றோர்கள் பந்தய சாலை போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
கோவை: கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்ந்த சிறுவனை, மருத்துவர் தாக்கியதாக பெற்றோர்கள் பந்தய சாலை போலீஸில் புகார் அளித்துள்ளனர்.
குறிச்சி பகுதியைச் சேர்ந்த அம்சவேணியின் மகன் சரண். இவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட போது மருத்துவர்களால் தாக்கப்பட்டதாகவும், தகாத வார்த்தைகளால் மருத்துவர்கள் பேசியதாகவும் அவரது தாயார் அம்சவேணி பந்தயசாலை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து, புகாரை பெற்றுக் கொண்ட போலீஸார், மருத்துவமனை உயர்அதிகாரிகளிடம் பேசி தகாத வார்த்தைகளால் பேசிய மருத்துவரை தண்டிப்பதாக கூறி புகார்தாரர் அம்சவேணியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
இதனையடுத்து, அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அலுவலரிடம் சிறுவனின் பெற்றோர்கள் புகார் அளித்தனர். மருத்துவமனை நிர்வாகம் சார்பில் சம்பந்தப்பட்ட மருத்துவரை விசாரித்து நடவடிக்கை எடுப்பதாக மருத்துவ அலுவலர் தெரிவித்தார்.
இது குறித்து சிறுவனின் தாயார் கூறும்போது, நோயாளிகளிடம் இரக்கம் காட்டவேண்டிய மருத்துவர்கள் இதுபோல் நடந்தது ஏற்புடையதல்ல. சிகிச்சைக்காக வந்த என் மகனை தகாத வார்த்தையில் பேசி அடித்த மருத்துவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இல்லையென்றால் குடும்பத்தோடு மருத்துவமனை முன்பு தற்கொலை செய்து கொள்வோம். என்றார்.