சீரான குடிநீர் வழங்கக் கோரி காலிக் குடங்களுடன் அரசுப் பேருந்துகளை சிறைபிடித்த பொதுமக்கள்

கோவை: கோவை கண்ணம்மநாயக்கனூர் பகுதியில் சீரான குடிநீர் வழங்கக் கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் காலிக் குடங்களுடன் அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



கண்ணம்நாயக்கனூர் பகுதியில் கடந்த ஒரு மாதமாக குடிநீர் வராததால் பலமுறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் மனு அளித்துள்ளனர். ஆனாலும், எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் திடீரென 4 அரசுப் பேருந்துகளை சிறைபிடித்து காலிக் குடங்களுடன் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அங்கு வந்த மதுக்கரை போலீஸார் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனாலும், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நேரில் வந்து பேச்சுவார்த்தை நடத்தி உறுதியளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என அவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, கிணற்றைத் தூர்வார நடவடிக்கை எடுப்பதாகவும், உடனடியாக கூடுதல் தொட்டிகளை அமைத்து தருவதாகவும் அதிகாரிகள் மற்றும் போலீஸார் உறுதியளித்ததைத் தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டு, கலைந்து சென்றனர். சீரான குடிநீர் வழங்கக் கோரி சுமார் நான்கு மணிநேரம் நடைபெற்ற இந்தப் போராட்டத்தால், பேருந்துகள் இன்றி அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர். 

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...