தமிழகம் முழுவதும் கோடைகாலம் துவங்கியுள்ள நிலையில், வெயிலின் தாக்கத்தை தணிக்கும் தர்பூசணியின் விற்பனையும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளது.

திருப்பூரில் தற்போது தர்பூசணி பழம் விற்பனை தொடங்கியுள்ளது. பொதுவாகக் கோடைக்காலம் என்றால் சூரியன் சுட்டெரிக்கத் தொடங்கிவிடும். வெப்பத்தில் இருந்து தப்பிக்க குளிர்ச்சியான பொருளை தேடுவது வழக்கம். அதில், ஏழை, எளிய மக்களும், அனைவரும் வாங்கி சாப்பிடக்கூடிய ஒன்று தர்பூசணிபழம். விலைக்குறைவாகவும் உள்ளதால் மக்களும் அதிகம் வாங்கி செல்கின்றனர்.

தர்பூசணி விற்பனை பற்றி கடை உரிமையாளர்கள் நாகராஜ் மற்றும் பெரியசாமி அவர்களிடம் கேட்ட போது, ”கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சீசன் சீக்கிரம் ஆரம்பமாகி விட்டது. பெரும்பாலும் பழங்கள் திண்டிவனம், உடுமலை, ஆண்டிப்பட்டி, தாராபுரம், பாண்டிச்சேரி, ஈ.சி.ஆர், கல்பாக்கம் போன்ற பகுதியில் இருந்து வரும். கடந்த ஆண்டு பிப்ரவரியில் ஆரம்பமான சீசன் இந்த முறை ஜனவரியில் துவங்கி விட்டது. மேலும், பழங்கள் வரத்து அதிகமாக உள்ளது. அதற்கேற்ற விற்பனையும் உள்ளது. மேலும், மாலை நேரங்களில் பள்ளி மாணவ, மாணவிகள் அதிகம் வாங்கி சாப்பிடுவதால் விற்பனை அதிக அளவில் உள்ளது.
கடந்த ஆண்டு கிலோ ரூ. 15 மற்றும் ரூ. 16-க்கு வாங்கிய பழங்கள் இந்த ஆண்டு ரூ. 12-க்கு வாங்குகிறோம். சீசன் தற்போது தான் ஆரம்பமானதால் இன்னும் வரும் காலங்களில் விலை அதிகரிக்கலாம்”, என்றனர்.

தர்பூசணி பழங்களை சுவைக்க வந்த பகவதி, சந்துரு, மற்றும் சின்னச்சாமி ஆகியோரிடம் கேட்ட போது, கோடை காலம் ஆரம்பமானதால் சூட்டை தணிக்க குளிர்ச்சிக்கு தர்பூசணி பழங்கள் தினம் வாங்கி சாப்பிடுகிறோம். மேலும், மற்ற குளிர்பானங்களின் விலை அதிகமாக இருப்பதால் அவற்றோடு ஒப்பிடுகையில் தர்பூசணி பழத்தின் விலை ரூ. 10-க்கு கிடைப்பதால் ஏழை, எளிய மக்களும் வாங்கி சாப்பிட முடிகிறது. மேலும், விலை குறைவாக இருப்பதால் வீட்டிற்கு முழுப் பழங்களை வாங்கி செல்கிறோம். கோடை காலத்தில் மட்டும் கிடைக்கும் இந்த வகை தர்பூசணி பழங்களை அனைவரும் வாங்கி சாப்பிட வேண்டும். இவ்வாறு கூறினர்.