கோவை மத்திய ரயில் நிலையத்தின் முன்புறம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.
கோவை: கோவை மத்திய ரயில் நிலையத்தின் முன்புறம் ஏற்படும் போக்குவரத்து நெரிசலால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

தென் இந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படும் கோவையில் உள்ள மத்திய ரயில்நிலையத்தில் நாள்தோறும் சேலம், சென்னை, திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கும், கேரளா, தில்லி, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களுக்கும் நூற்றுக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. பல லட்சம் பயணிகள் இதில் பயணிக்கின்றனர்.
தென்னகத்து ரயில்வேயில் சேலம் கோட்டத்தின் கீழ் கோவை மத்திய ரயில் நிலையமானது இயங்கி வருகிறது. சென்னையை அடுத்து கோவை ரயில்நிலையம் தான் வருவாயிலும், போக்குவரத்திலும் பெரியது. கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், அரசு மருத்துவமனை, நீதிமன்றம், காவல்துறை ஆணையர் மற்றும் கண்காணிப்பாளர் போன்ற முக்கிய அலுவலகங்கள் ரயில் நிலையம் அருகில் அமைந்துள்ளது. இதனால், ரயில் நிலையம் சாலையானது மிகுந்த பரபரப்பாகக் காணப்படும். பல லட்சம் வாகனங்கள் அவ்வழியே சாலையை கடக்கின்றன.

இதனிடையே, கோவை மத்திய ரயில் நிலையம் முன்பு செயல்பட்டு வரும் ஆட்டோ நிறுத்தத்தை 118 ஆட்டோக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சுமார் 30 வருடங்களாக இயங்கும் அந்த நிறுத்தத்தில் தற்போது ஆட்டோகள் நிறுத்தக் கூட இடமில்லாமல் இடநெருங்கடி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவும், சாலையில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு காரணம் தற்போது அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகின்றன.
அதேபோல, ரயில்நிலைய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் ஒன்றன் பின் ஒன்றாக நிறுத்துவதாலும் போக்குவரத்து நெரிசல் அதிக அளவில் ஏற்படுகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு தீர்வு காணவேண்டும் என்றால் ஆட்டோ நிறுத்தத்தை ரயில் நிலையம் உள்ளே செயல்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து ஆட்டோ ஓட்டுனர் ரங்கநாதன் கூறுகையில், "இங்கு முப்பது வருடமாக ஆட்டோ ஒட்டி வருகிறேன். 2001-ம் ஆண்டு வரை ஆண்டுக்கு ரூ. 15 செலுத்தி ஆட்டோக்களை ரயில்நிலையம் உள்ளே தான் இயக்கி வந்தேன். ஆனால், அதன் பிறகு ரயில்நிலையம் விரிவாக்கம் மற்றும் வாடகை ஏற்றம் உள்ளிட்ட காரணங்களினால் 18 வருடமாக ரயில்நிலையம் முன்பு ஆட்டோவை இயக்கி வருகிறேன்," என்றார்.
ஆட்டோக்களை ரயில்நிலையம் உள்ளே நிறுத்த அனுமதிக்க தற்போது 6 மாதத்திற்கு ஒருமுறை ரூ. 2,800 மற்றும் பிரிபேய்டு முறையில் ஆட்டோக்களை இயக்கும் போது ஒரு வாடகைக்கு ரூ. 5-ம் கோவை மத்திய ரயில் நிலையத்திற்கு தரவேண்டும் எனக் கூறப்படுகிறது.
"இந்த வாடகையை வருடத்திற்கு ரூ. 500 எனக் குறைத்தால் ஆட்டோக்களை உள்ளே நிறுத்த சம்மதம். அதேபோன்று, பன்னாட்டு நிறுவனங்களின் வாகனங்கள் இங்கு வாடகைக்கு அனுமதிக்கக்கூடாது. ரயில்நிலையம் முன்பு உள்ள ரயில் எஞ்சின் அழகுக்காக வைக்கப்பட்டுள்ளது. அதனையும் எடுக்க வேண்டும்," என ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த ஒரு கிலோ மீட்டர் சாலையை கடக்க சுமார் 20 நிமிடங்கள் ஆகிறது எனவும், ஆட்டோ நிறுத்தத்தை முறைப்படுத்தினால் இந்தப் போக்குவரத்து நெரிசல் குறையும் என வாகன ஒட்டிகள் தெரிவித்தனர்.
இது குறித்து கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் (போக்குவரத்து) சுஜித்குமார் கூறுகையில், "ஆட்டோக்களை உள்ளே நிறுத்த ரயில்வே துறை அதிகாரிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. வாகன ஒட்டிகள் மாவட்ட ஆட்சியர் அலுவகம் அடுத்துள்ள தீயணைப்பு துறை அலுவலகம் முதல் அரசு மருத்துவமனை வரை வழியில் எங்கும் வாகனங்களைத் திருப்பாமல் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர்," என்றார்.
சேலம் கோட்ட ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில், பேச்சுவார்த்தையில் சுமூகமாக தீர்வு ஏற்படும் என நம்பிக்கையுள்ளது. அதேபோல, ஆட்டோக்களை ரயில்நிலையம் பின் பகுதியில் நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. என்றார். இது தொடர்பாக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மக்களின் அவதியைப் போக்க வேண்டும் என ரயில்நிலைய பயணிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.