தொண்டாமுத்தூர் தொகுதியில் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற வளர்ச்சிபணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார். மேலும், புதிய பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டினார்.

கோவை : தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் முடிவுற்ற வளர்ச்சிபணிகளை நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தொடங்கி வைத்தார். மேலும், புதிய பணிகளுக்கு அடிக்கல்லும் நாட்டினார். 

வேடபட்டி பேரூராட்சியின் மூலம் நரசீபுரம் சாலை சிறுபாலத்தை அகலப்படுத்தி மற்றும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி மற்றும் தமிழ்நாடு நகர்ப்புற சாலை மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து ரூ. 1 கோடி மதிப்பில் நம்பியழகன்பாளையம் மெயின்ரோடு முதல் பாலம் வரை வடிகால், வன்னியம்பாளையத்தில் வடிகால், குரும்பபாளையத்தில் வடிகால் அமைத்தல், மற்றும் மருதப்ப நகர், சின்னத்தம்மன் நகரில் தார்சாலை, ஆண்டிபாயைம் கிரீன் சிட்டி, எம்.ஜி.ஆர். வீதி மற்றும் ராஜீவ் வீதியில் தார்சாலை அமைக்கும் பணி, குரும்பாளையத்தில் பொது வினியோகக் கடை கட்டுதல் ஆகிய பணிகளுக்கு பூமி பூஜை போடப்பட்டது. 



மேலும், வேடப்பட்டி பேரூராட்சி நம்பியழகன்பாளையத்தில் அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டத்தின் கீழ் 51 பயனாளிகளுக்கு வீடு கட்ட உத்திரவு ஆணையினை அமைச்சர் வழங்கினார். நெடுஞ்சாலைத் துறை மூலம் மாதம்பட்டி - கரடிமடை சாலை முதல் குப்பனூர் வரை ஒருவழிச் சாலையை இடைவழிச் சாலையாக அகலப்படுத்தி ரூ. 1.96 கோடி மதிப்பில் மேம்பாடு செய்யும் பணி, மற்றும் கோவை - சிறுவாணி சாலை முதல் மத்திபாளையம் சாலை வரை ஒருவழிச் சாலையை இடைவழிச் சாலையாக ரூ.199 கோடி மதிப்பில் அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணி, கோவை - சிறுவாணி சாலை இருட்டுப்பள்ளம் பகுதியில் ரூ.1.12 கோடி மதிப்பில் மேம்பாடு மற்றும் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி;, கோவை சிறுவாணி சாலையில் இடைவழிச் சாலையாக உள்ளதை இருவழிச் சாலையாக ரூ1.63 கோடி மதிப்பில் அகலப்படுத்தியும், மேம்பாடு மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணி ஆகிய பணிகள் மேற்கொள்ளப் பூமி பூஜை போடப்பட்டுள்ளது.

தொண்டாமுத்தூர் பேரூராட்சி சந்தைப்பேட்டை, டி.என்.ஆர்.நகர், புத்தூர் ரோடு ஜல்லிகுழி வீதியில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து ரூ. 1 கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி, மாரியம்மன் கோவில் அருகில் இயக்கம் மற்றும் பராமரிப்பு இடைவெளி நிரப்பும் நிதியிலிருந்து ரூ. 30 லட்சம் மதிப்பில் சமுதாய நலக்கூடம் அமைக்கும் பணிகளுக்கு பூமி பூஜை போடப்பட்டுள்ளது. மேலும், 1-வது வார்டு வண்டிக்காரனூரில் தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து ரூ. 1 கோடி மதிப்பில் கான்கீரிட் சாலையை பொதுமக்களின் பயன்பாட்டிற்கு அமைச்சர் திறந்து வைத்தார். 

தாளியூர் பேரூராட்சி 5-வது வார்டு வேடபட்டி எல்லை சித்திரை சாவடி வாய்க்கால் முதல் மாமரத்து வயல் வரை நபார்டு திட்டத்திலிருந்து ரூ. 1கோடி மதிப்பில் தார்சாலை அமைக்கும் பணி, உலியம்பாளையம்- குளத்துப்பாளையம் சாலையை ஒருவழிச் சாலையை இடைவழிச் சாலையாக ரூ. 1.99 கோடி மதிப்பில் அகலப்படுத்தி மேம்பாடு செய்யும் பணி, தமிழ்நாடு நகர்ப்புற சாலை கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்திலிருந்து ரூ. 1 கோடி மதிப்பில், பூச்சியூர் - ஐயப்பன் கோவில் முதல் ஜோதி கார்டன் வரை வடிகால் மற்றும், ராசிகார்டன் முதல் ஆர்.ஆர். அபிநவ் அபார்ட்மெண்ட் வரை தார்சாலை, அமைக்கும் பணிகளுக்கு பூமிபூஜை போடப்பட்டது. மேலும், கலிக்கன் நாயக்கன் பாளையத்தில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ. 3 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட பயணிகள் நிழற்குடையும், உள்கட்டமைப்பு இடைவெளி நிரப்பும் நிதியிலிருந்து ரூ. 50 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட புதிய அலுவலக கட்டிடத்தையும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு எஸ்.பி. வேலுமணி திறந்து வைத்தார். 

இந்நிகழ்ச்சியில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர் ராஜ், உதவி இயக்குநர் பேரூராட்சிகள் கணேஷ்ராம், நெடுஞ்சாலைத்துறை கோட்டப்பொறியாளர் சிற்றரசன், வட்டாட்சியர் முரளி மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.  

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...