ஈரோடு - திருச்சிக்கோட்டை ரயில்நிலையம் இடையே புதிதாக மின்மயமாக்கப்பட்டுள்ள ரயில்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே, ஏ, மனோஹரன் நாளை (பிப்.,07) ஆய்வு செய்கிறார்.
ஈரோடு - திருச்சிக்கோட்டை ரயில்நிலையம் இடையே புதிதாக மின்மயமாக்கப்பட்டுள்ள ரயில்தடத்தில் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே, ஏ, மனோஹரன் நாளை (பிப்.,07) ஆய்வு செய்கிறார்.
நாளை காலை சுமார் 9.30 மணிக்கு ஈரோடு ரயில்நிலையத்தில் இருந்து புறப்பட்டு, ஈரோடு மற்றும் திருச்சிக்கோட்டை ரயில்நிலையம் இடையே உள்ள ரயில்தடங்களை ஆய்வு செய்த பிறகு, மதியம் சுமார் 2 மணியளவில் கரூரிலும் அவர் ஆய்வு செய்ய உள்ளார். பின்னர், திருச்சிராப்பள்ளி ரயில்நிலையத்திற்கு மாலை சுமார் 5.00 மணி அளவில் சென்றடைகிறார்.
மறுநாள் (பிப்.,08) காலை 09.50 மணிக்கு திருச்சியில் இருந்து புறப்பட்டு வழியில் உள்ள ரயில்தடங்களை பார்வையிடும் ரயில்வே பாதுகாப்பு ஆணையர் கே, ஏ, மனோஹரன், மாலை 5.00 மணியளல் ஈரோடு செல்கிறார்.
இரண்டாம் நாளன்று அவர் திருச்சிக் கோட்டை மற்றும் ஈரோடு ரயில்நிலையங்களுக்கிடையே அதிவேக ரயிலியக்க சோதனை நடத்த உள்ளதால், மதியம் 3.00 மணி முதல் இரவு 7.00 மணிக்குட்பட்ட நேரத்தில் யாரும் ரயில்தடத்தின் அருகில் செல்லாமலும், ரயில்தடத்தை கடக்க முயலாமலும் இருக்குமாறு பயணிகள் மற்றும் பொதுமக்களிடம் கேட்டுக் கொள்ளப்படுகிறது.
இந்த ஆய்வின் போது, அவருடன், சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்சர் வர்மா, தெற்கு ரயில்வே முதன்மை மின்பொறியாளர் எஸ், ராமசுப்பு, தெற்கு ரயில்வே தலைமை ரயில்வே மின்மயமாக்கல் திட்டப் பொறியாளர் நாகேந்திரபிரசாத், சேலம் கோட்ட முதுநிலை மின் பொறியாளர் எம். பிரபாகரன், கரூர் துணைத்தலைமை மின்மயமாக்கல் மின்பொறியாளர் டி.சி.ஜான்சன், இதர சேலம் கோட்ட அதிகாரிகளுடன், தெற்கு ரயில்வே மின்மயமாக்கல் பிரிவு அதிகாரிகள் கலந்து கொள்கின்றனர்.