கோவையில் அனுமதியின்றி இயங்கும் 237 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நா.கார்த்திக் மனு அளித்தார்.
கோவை: கோவையில் அனுமதியின்றி இயங்கும் 237 டாஸ்மாக் கடைகளை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோவை மாவட்ட ஆட்சியரிடம் சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் நா.கார்த்திக் மனு அளித்தார்.

இது தொடர்பாக அவர் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:-
கடந்த 2010-ம் ஆண்டு திமுக ஆட்சியில் சிங்காநல்லூர் SIHS காலனியில் ரயில்வே உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்காக 23 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அரசாணை பிறப்பிக்கப்பட்டு அதற்குண்டான ஆயத்தப் பணிகள் நடைபெற்று வந்தன.
அதன்பிறகு வந்த அ.தி.மு.க., ஆட்சியில், மேம்பால பணிகளுக்கு நிலம் கையகப்படுத்துவதிலும், உரிய இழப்பீடுகள் வழங்குவதிலும் முறையானபடி நடவடிக்கை எடுக்க வில்லை. கடந்த நான்கு ஆண்டு காலமாக மேம்பால கட்டுமான பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் SIHS காலனி வழியாக சிங்காநல்லூர், நீலிக்கோணம்பாளையம் ,நேதாஜி நகர் வரக் கூடிய ஆயிரக்கணக்கான மக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். எனவே, இந்த பகுதியில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி இந்த இடத்தில் உள்ள ரயில்வே உயர்மட்ட மேம்பால கட்டுமானப் பணிகள் உடனடியாக தொடங்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
ஹோப் கல்லூரி - தண்ணீர் பந்தல் ரயில்வே உயர்மட்ட மேம்பாலம், கட்டுவதற்கு 2010 ம் ஆண்டு திமுக ஆட்சியில் அரசாணை பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இன்று வரை பணிகள் துவங்கப்படவில்லை . ஆகவே இந்த பகுதியில் உள்ள பொதுமக்களின் நலன் கருதி இந்த இடத்தில் தொடங்கப்படாமல் உள்ள ரயில்வே உயர்மட்ட மேம்பால கட்டுமானப் பணிகள் உடனடியாக தொடங்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
சிங்காநல்லூரில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. எனவே, அப்பகுதியில் உள்ள நான்கு முனை சந்திப்பில் உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு உண்டான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். கோவையில் சட்டவிரோதமாக செயல்பட்டு வரும் 237 டாஸ்மாக் கடைகளை உடனடியாக மூடுவதற்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பீளமேடு பகுதியில் உள்ள மத்திய அரசின் உணவு தானிய சேமிப்பு கிடங்கில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலை பழுதடைந்துள்ளது. எனவே அதனை சீர்ப்படுத்த வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.